Home
News

Jio, Airtel, Vodafone Idea, BSNL கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்..

நீங்கள் எந்த நெட்வொர்க் பயனராக இருந்தாலும் சரி, இந்த பதிவு நிச்சயமாக நீங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் கட்டணத்தின் செலவை கொஞ்சம் கட்டுப்படுத்தி, உங்கள் பாக்கெட்டில் பெரிய ஓட்டை விழாதபடி பார்த்துக்கொள்ளும் என்று நம்புகிறோம். காரணம், இந்த பதிவில் Jio, Airtel, Vodafone Idea அல்லது Vi, BSNL போன்ற நிறுவனங்களின் கீழ் கிடைக்கும் விலை மலிவான ரீசார்ஜ் திட்டங்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

ஜியோவில் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோவில் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்
நாட்டில் இப்போது ஜியோ நிறுவனத்தின் கொடி தான் டெலிகாம் துறையில் ஒய்யாரமாய் பறக்கிறது, காரணம் மலிவான விலையில் மற்ற நெட்வொர்க்கை விட ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு டேட்டா நன்மையை வாரியிறைக்கிறது. அப்படி, ஜியோ நிறுவனத்திடம் கிடைக்கும் மலிவான மூன்று சிறந்த திட்டங்கள் என்று பார்த்தால் அது ரூ. 149, ரூ. 199 மற்றும் ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டங்களாகும்.

ஜியோ மலிவு திட்டங்கள்

ஜியோ மலிவு திட்டங்கள்

ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டமானது தனது பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அனைத்து நெட்வொர்க் அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அடுத்தபடியாக. ரூ.199 திட்டமானது தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் SMS நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இறுதியாக ரூ.249 திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் SMS ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்களுடன் ஜியோ டிவி, jio money போன்ற பல சேவைகளும் இலவசமாகக் கிடைக்கிறது.

Vi கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்

Vi கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்
சமீபத்தில் Vi என்று பெயர் மாற்றப்பட்ட வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.199 மற்றும் ரூ.249 ஆகிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் உங்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது. Vi ரூ.199 திட்டமானது உங்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற தேசிய மற்றும் உள்ளூர் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ. 249 திட்டம்

ரூ. 249 திட்டம்

அதேபோல், ரூ. 249 திட்டமானது 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இது டேட்டா ரோல்-ஓவர் வசதியையும் ஆதரிக்கிறது.

BSNL கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்

BSNL கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்
அரசின் டெலிகாம் நிறுவனமான BSNL நிறுவனம், உங்களுக்கு ரூ.247 மற்றும் ரூ.199 ஆகிய இரண்டு திட்டங்களை மலிவு விலையில் வழங்குகிறது. ரூ.199 திட்டமானது உங்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.247 திட்டமானது தினமும் 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அன்லிமிடெட் அழைப்பு (250 நிமிடங்கள்) மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

Airtel கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்

Airtel கீழ் கிடைக்கும் சிறந்த மற்றும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்
Airtel நிறுவனத்தின் கீழ் ரூ.199, ரூ.219, ரூ.249 கிடைக்கும் மூன்று மலிவு விலை திட்டங்கள், ரூ.199 திட்டமானது தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் 100 SMS ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ. 219 திட்டமும் இதே நன்மைகளை அப்படியே வழங்குகிறது.

ரூ. 249 திட்டம்

ரூ. 249 திட்டம்

ஆனால், 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ. 249 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக் அணுகல் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கான அணுகல் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Prepaid Plans Under Rs 250: Which Plan you Choose : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X