ஏர்டெல், ஜியோ, வோடபோன் : ரூ.300-க்குள் தினசரி 2ஜிபி தரும் திட்டங்கள்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் மலிவு விலையில் தொடர்ந்து புதிய டேட்டா சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் டேட்டா இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் மலிவு விலையில் தொடர்ந்து புதிய டேட்டா சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் டேட்டா இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது.

குறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் டேட்டா சலுகை வழங்குவதுடன் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற செயலிகளின் வீடியோ சேவைகளை பார்க்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.249 பிரீபெய்ட் திட்டம்:
இப்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரூ.300-க்குள் தினசரி 2ஜிபி தரும் சிறப்பான திட்டங்களை விரிவாக பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.249 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை
28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினசரி இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் உட்பட ரோமிங் வசதியும் வழங்கப்படுகிறது.
பின்பு சியோமி ரெட்மி நோட் 7சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் இந்த டேட்டா சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிரீபெய்ட் திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.99-பிரீபெய்ட் திட்டத்தில் கூட சிறப்பான டேட்டா சலுகை வழங்குவதுடன், அமேசன் பிரைம் வீடியோக்களை பார்ப்பதற்கு அனுமதிக்கிறது.
மேலும் ஜியோவின் ரூ.198 பரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் வரை பயன்படுத்த முடியும். பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.255 பீரிபெய்ட் திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.255 பீரிபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் கிடைக்கும்என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
வோடபோன் நிறுவனம் போன்ற ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 2ஜிபி தரும் டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது, பின்பு அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற செயலிகளின் வீடியோ சேவைகளை பார்க்க அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications