ஜியோ, ஏர்டெல் எல்லாம் ஓரம்போ.. ரூ.200க்குள் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் BSNL.. பட்டியல் இதோ..
ஜியோ (jio), ஏர்டெல் (Airtel) போன்ற தனியார் நிறுவனங்கள் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி வருகிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனம் தொடர்ந்து மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் 200க்கு கீழ் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகள் வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது கூட ரூ.200க்கு கீழ் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.200க்கு கீழ் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan) ஆனது 25 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 25ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.153 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 107 Prepaid Plan) ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 200 நிமிட இலவச அழைப்புகள் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 147 Prepaid Plan) ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.147 திட்டத்தின் வேலிடிட்டி 25 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications