Jio, Airtel, Vi: ஒரு வருட வேலிடிட்டி உடன் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் எக்கசக்க சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் 5ஜி சேவையை வழங்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் அடுத்த மாதம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.2545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 336 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 504ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.
வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தனிசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் வழங்கும் இந்த ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஒரு மலிவு விலை ப்ரிபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியது. இப்போது அந்த ஜியோ மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் அதன் நன்மைகளைப் பார்ப்போம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.61 திட்டம் தான தற்போது கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது. முதலில் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் (Jio Data Pack) திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த ஜியோ ரூ.61 திட்டம் ஆனது முன்பு 6ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது. ஆனால் தற்போது தற்போது இந்த திட்டத்தில் 10ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
எனவே ஜியோ பயனர்கள் ரூ.61 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் இப்போது 10ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரீசார்ஜ் திட்டம் எந்த ஒரு வேலிடிட்டியுடன் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான அர்த்தம், இந்த திட்டம் உங்களுடைய பேசிக் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








