IPL 2024 ஸ்பெஷல்.. பெஸ்ட் Airtel, Jio மற்றும் Vi பிளான்ஸ்.. அடுத்த 2 முதல் 3 மாசத்துக்கு கவலையே இல்லை..
ஐபிஎல் 2024 சீசன் துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. IPL கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 2 மாதத்திற்கு எந்தவித தடையுமின்றி கண்டு மகிழ அனுமதிக்கும் குறைந்த விலை ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ திட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
பெஸ்ட் ஐபிஎல் ப்ரீபெய்ட் திட்டம் (Best IPL Prepaid Plan): டாடா இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 சீசன் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு எங்கு திரும்பினாலும், போனிலும், ஸ்மார்ட் டிவிகளிலும், ரேடியோக்களிலும் கிரிக்கெட் போட்டியை பற்றிய தகவல்கள் தான் ஒளிபரப்பாக போகிறது. IPL 2024 போட்டிகளை இலவசமாக கண்டு மகிழ ஜியோ சினிமா (JioCinema) லைவ் ஸ்ட்ரீம் சேவையை வழங்குகிறது.

தினமும் IPL மேட்ச் பார்க்க எத்தனை GB டேட்டா தேவைப்படும் தெரியுமா?
இந்த வருட IPL போட்டியை 4K குவாலிட்டி உடன் மக்கள் பார்த்து ரசிக்கலாம். பொதுவாக, ஒரு ஐபிஎல் மேட்ச் நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை நீடிக்கும். இதை மொபைல் சாதனத்தில் 1080p தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு சுமார் 3.5 GB டேட்டா தேவைப்படுகிறது. அதே நேரத்தில் 4K ஸ்ட்ரீமிங் செய்ய ஒரு நபருக்கு 22 ஜிபிக்கு மேல் டேட்டா தேவைப்படுகிறது.
IPL 2024 பார்க்க பெஸ்டான Airtel, Jio மற்றும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்: Tata IPL 2024 போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய போதுமான டேட்டாவை வழங்கும் Airtel, Jio மற்றும் Vi வழங்கும் சில சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் இதோ.
1. ஜியோ ஐபிஎல் கிரிக்கெட் பிளான் (Jio IPL Cricket Plan):
ஜியோ ரூ.444 திட்டம் 100GB டேட்டாவை 60 நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ரூ.667 திட்டம் 150GB டேட்டாவை 90 வேலிடிட்டியுடன் வருகிறது. ஜியோவின் இறுதி திட்டம் ரூ.999 திட்டம் தினமும் 3GB டேட்டாவுடன் 84 வேலிடிட்டியை கொண்டுள்ளது.

2. ஏர்டெல் ஐபிஎல் கிரிக்கெட் பிளான் (Airtel IPL Cricket Plan):
ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாள் வேலிடிட்டியுடன், தினமும் 3GB 4ஜி டேட்டாவை வழங்கும் நன்மையுடன் வருகிறது. இந்தத் திட்டம் ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் நீடிக்கும் செல்லுபடியை கொண்டுள்ளது. போனஸாக, இந்த திட்டம் ஒரு இலவச பிரைம் வீடியோ சந்தா மற்றும் அன்லிமிடெட் 5ஜி நன்மையை வழங்குகிறது.
3. விஐ ஐபிஎல் கிரிக்கெட் பிளான் (Vi IPL Cricket Plan):
இந்த Vi திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவுடன் ரூ.699 விலையில் வருகிறது. இது தவிர நிறுவனம் இப்போது ரூ.475 திட்டத்தை தினமும் 4ஜிபி டேட்டா நன்மையுடன் வழங்குகிறது. ஆனால் இது வெறும் 28 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. Vi மூவீஸ் மற்றும் டிவி சந்தாவுடன், ஆள்-நைட் பின்கே நன்மையையும் வழங்குகிறது. இது நள்ளிரவு 12மணி முதல் காலை 6மணி வரை அன்லிமிடெட் இலவச டேட்டாவை வழங்குகிறது.
IPL போட்டியை எந்தவித தடையுமின்றி, அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக கண்டு மகிழ நீங்கள் ஆசைப்பட்டால், கட்டாயம் இந்த பட்டியலில் உள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யலாம். இந்த திட்டங்கள் எல்லாம் குறைந்தது 2 மாதம் மற்றும் 3 மாதம் வேலிடிட்டி உடன் வருவதால் இது பெஸ்ட் தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications








