Home
News

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

குறைந்த விலையில் தரமான பவர் பேங்க் (Power Bank) சாதனம் வாங்க ஆசையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். இப்போது, இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய தரமான சிறந்த பவர் பேங்க் சாதனங்களின் பட்டியலை உங்களுக்காக இங்குத் தொகுத்துள்ளோம். உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் கையில் வெறும் ரூ. 499 என்ற கட்டணம் இருந்தால் போதும், ஒரு தரமான பவர் பேங்க் டிவைஸை இப்போதே நீங்கள் வாங்கிவிடலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஏன் ஒரு பவர் பேங்க் உங்களுடன் இருப்பது அவசியம் தெரியுமா?

இன்றைய சூழ்நிலையில் ஏன் ஒரு பவர் பேங்க் உங்களுடன் இருப்பது அவசியம் தெரியுமா?

உங்களிடம் என்ன ஸ்மார்ட்போன் சாதனம் இருந்தாலும் சரி, கண்டிப்பாக உங்களிடம் குறைந்தது ஒரு பவர் பேங்க் டிவைஸாவது இருக்க வேண்டும். இப்போது அவசியமில்லை என்று தோன்றினாலும், திடீரென ஒரு நாள் இதன் அவசியத்தை நீங்கள் கட்டாயம் உணருவீர்கள். காரணம், நம்முடைய ஸ்மார்ட்போன்கள் இப்போது அடிக்கடி சார்ஜ் பற்றாக்குறையைச் சிக்கல்களைச் சந்திக்கின்றன. இதனாலேயே பவர் பேங்க் டிவைஸ் இப்போது அனைவருக்கும் அவசியமாகிவிட்டது. சரி, இப்போது கம்மி விலையில் எப்படி புதிய பவர் பேங்க் சாதனத்தை வாங்கலாம் என்று பார்க்கலாம்.

1. Syska P055OX 5000 mAh Lithium Polymer Power Bank

1. Syska P055OX 5000 mAh Lithium Polymer Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம், அதன் விலைக்கு ஏற்ற நீண்ட பேட்டரி ஆற்றல் உடன் வருகிறது. இது Syska நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 5000mAh கொண்ட பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இது உங்களுடைய ஸ்மார்ட்போன் பேட்டரியை முழுமையாக 1 முறையும், பாதிக்குப் பாதி என்ற கணக்கில் 2 முறையும் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 799 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 499 விலையில் கிடைக்கிறது.

2. Croma 12W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank

2. Croma 12W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது டூயல் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட Type-C மற்றும் Micro-USB ஆதரவைக் கொண்டுள்ளது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 1,000 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது. இதன் சார்ஜிங் நேரம் 5 மணி நேரமாகும்.

3. Candytech 10000 mAh Lithium Polymer Fast Charging Power Bank

3. Candytech 10000 mAh Lithium Polymer Fast Charging Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம் Qi சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்தியத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 10,000mAh கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 1,999 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 672 என்ற விலையில் கிடைக்கிறது. இது 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் இந்த டிவைஸை வாங்கலாம். இது டைப்-சி போர்ட் அம்சத்துடன், 6 மாத வாரண்ட்டி உடன் வருகிறது.

4. URBN 10000mAh Li-Polymer Ultra Compact Type-C Power Bank

4. URBN 10000mAh Li-Polymer Ultra Compact Type-C Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 699 என்ற விலையில் கிடைக்கிறது. இது 1 வருட உத்தரவாதத்துடன் வெள்ளை நிறத்தில் வாங்கக் கிடைக்கிறது.

5. Croma 10W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank

5. Croma 10W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது டூயல் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட Micro-USB ஆதரவை கொண்டுள்ளது. இது 18 மாத உத்தரவாதத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அசல் விலை ரூ. 1,300 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 799 விலையில் கிடைக்கிறது. இதன் சார்ஜிங் நேரம் 5 மணி நேரமாகும்.

6. Ambrane 10000mAh Li-Polymer Powerbank

6. Ambrane 10000mAh Li-Polymer Powerbank

இந்த பவர் பேங்க் சாதனம் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது டூயல் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 2 போர்ட்களை இந்த டிவைஸ் கொண்டுள்ளது. இது 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போதைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 799 விலையில் கிடைக்கிறது. Ambrane இந்தியாவில் ஒரு நம்பகமான பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

7. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank

7. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank

இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்தியத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 999 விலையில் கிடைக்கிறது. இது க்ரீன், பர்பிள், ப்ளூ ஆகிய வெவ்வேறு வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Power Bank Devices To Buy From Starting Price Of Rs 499 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X