கண்ண மூடிக்கிட்டு ஆர்டர் போடலாம்.. ரூ.15,000 பட்ஜெட்டில்.. பலரும் விரும்பி வாங்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!
ரூ,15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களா? ஆம் என்றால், கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ரூ.15000 பட்டேஜெட்டில் பலரும் விரும்பி வாங்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் (Best Phones Under 15000) பட்டியல் இதோ:
05. சாம்சங் கேலக்ஸி எஃப்23 (Samsung Galaxy F23): ஓராண்டு பழைய ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட,சாம்சங் கேலக்ஸி எஃப்23 ஆனது ரூ.15000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மிட்ரேன்ஜ் போன்களில் காணப்படும் ஒரு ப்ராசஸர் ஆகும்.

60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் FHD+ டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, பெரிய 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ரூ.15,999 க்கும் மற்றும் ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
04. ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G): ரூ.15கே பட்ஜெட்டில் நீங்கள் ஒரு ஸ்டைலான ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால், ரியல்மி 11எக்ஸ் ஒரு நல்ல விருப்பமாக இருக்கும். அட்டகாசமான டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ரூ.13,499 க்கும் மற்றும் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியா டெக் டைமென்சிட்டி 6100+ சிப், 6.72-இன்ச் FHD+ டிஸ்பிளே, 60H ரெஃப்ரெஷ் ரேட், 64-மெகாபிக்சல் மெயின் சென்சார், ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது
03. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): க்ளீன் ஆன டிசைன், சக்திவாய்ந்த ;லேட்டஸ்ட் ப்ராசஸர் என ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 15,000 க்கு குறைவான விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.79-இன்ச் FHD+ டிஸ்பிளே, பெரிய 5,000mAh பேட்டரி 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் 'டெப்த்' கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ,11,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
02. போக்கோ எக்ஸ்5 (Poco X5): இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.18,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த நேரத்தில் இது ரூ.20000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் போனாக திகழ்ந்தது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் பெஸ்ட் போனாக திகழ்கிறது. இது 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ரூ.13,999க்கும் மற்றும் ரூ.14,999க்கும் வாங்க கிடைக்கிறது.
01. மோட்டோ ஜி54 (Moto G54): ரூ.15000 க்குள் என்கிற பிரிவில், கண்களை மூடிக்கொண்டு வாங்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். விலையை மீறிய பல அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முறையே ரூ.13,999க்கும் மற்றும் ரூ.15,999க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications