ஜனவரி 2016 தலைச்சிறந்த ஸ்மார்ட்போன்கள்
ஒற்றை அம்சத்தை கொண்டு ஒரு ஸ்மார்ட்போனினை வாங்க முடியாது. நம்ம பட்ஜெட்டிற்கு ஏற்ற, அதே சமயம் அனைத்து அம்சங்களும் கொண்ட கருவியை தான் அனைவரும் வாங்குவோம். சமீப காலமாக சிறந்த கேமரா, பேட்டரி மற்றும் பல அம்சங்களை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
இங்கு அனைத்து சிறப்பம்சங்களை கொண்டு, அதே சமயம் ரூ.10,000 விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம்.

யு யுரேகா ப்ளஸ்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்த கருவி ரூ.15,000 பட்ஜெட்டில் தலைசிறந்த கேமரா கொண்ட கருவியாக இருந்து தற்சமயம் ரூ.10,000 பட்ஜெட்டில் தலைசிறந்த கருவியாக இருக்கின்றது.

கூல்பேட் நோட் 3
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த கருவி சந்தையில் ரூ.8,999 முதல் கிடைக்கின்றது. கொடுக்கும் விலைக்கு ஏற்ற அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த கருவியில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சி்யோமி ரெட்மி 2 ப்ரைம்
கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி அதிகம் விற்பனையான கருவிகளில் ஒன்றான ரெட்மி 2 ப்ரைம். 4.7 இன்ச் திரை கொண்டிருப்பதோடு ரூ.6,999 முதல் சந்தையில் கிடைக்கின்றது.

ஃபிக்காம் பேஷன் 660
கொடுக்கும் விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் அழகிய வடிவமைப்பு கொண்ட இந்த கருவி சந்தையில் ரூ.8,999 முதல் கிடைக்கின்றது.

இன்டெக்ஸ் க்ளவுட் ப்ளாஷ்
இந்திய சந்தையில் சமீபத்தில் வெளியான இந்த கருவி சந்தையில் ரூ.7,999 முதல் கிடைக்கின்றது.

யு யுனிக்
இப்பட்டியலில் விலை குறைந்த கருவியான இந்த கருவி 4ஜி எல்டிஈ வசதி கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி சந்தையில் ரூ.4,999 முதல் கிடைக்கின்றது.

கருவிகள்
இவைகளை தவிர்த்து மோட்டோ ஈ ஜென்2, இன்ஃபோகஸ் எம்350, மெய்ஸூ எம்2 போன்ற கருவிகளும் சிறப்பான விற்பனையை சந்தித்தன. ஆனால் இவைகளில் சில அம்சங்களில் குறைபாடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications