அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார்: சிறந்த ஓடிடி தளங்களின் விவரங்கள்!
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டன.

ஓடிடி சேவைகள்
ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். குறிப்பாக் சீரிஸ் என்று பார்க்கும் போது நெட்பிளிக்ஸ் சிறந்தது என கூறப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ஓடிடி தளங்கள்
தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டு ஓடிடி அணுகலை வழங்குகிறது.

நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நெட்பிளிக்ஸ் அதன் சந்தாதாரர்களை அதிகரிக்க வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மூன்றே மாதங்கள் அதாவது கடந்த காலாண்டு முடிவு(கொரோனா தொற்றினால் ஆங்காங்கே மக்கள் வீட்டுக்குள் தேங்கிய மாதங்கள்) இந்த மாதங்களில் மட்டும் 709 மில்லியன் டாலர் வருமானம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் சந்தா அணுகல் விலை
நெட்பிளிக்ஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களில் ஒற்றை ஸ்க்ரீன் மாறுபாட்டு திட்டத்தை மேற்கொள்ள ரூ.199 விலை செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ப்ரீமியம் நான்கு ஸ்க்ரீன் மற்றும் அல்ட்ரா எச்டி காட்சியை காண்பதற்கு ரூ.799 திட்டத்தை பெறலாம். இதற்கு இணைய சேவை என்பது பிரதானம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமேசான் பிரைம் சந்தா விவரங்கள்
அமேசான் பிரைம் மெம்பராக மாற மாதம் ரூ.129 செலுத்த வேண்டும். ரூ.129 செலுத்தி அடிக்கடி படம் பார்க்கலாம் என்று நினைத்தால் அதற்கு இடையூறு இல்லா இணைய சேவை வேண்டும். டிவியின் அளவை பொருத்து இணைய தேவை மாறுபடும். அமேசான் பிரைமில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலும் இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த தளம் சிறந்த தேர்வாகும்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல்
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் பெறுவதற்கு மாத பிளானாக ரூ.299 செலுத்த வேண்டும். இதற்கும் இணைய தேவை பிரதானம்தான். நெட்பிளிக்ஸ் மாத சந்தா விலை ரூ.199 முதல் ரூ.799 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வெளியீட்டை பொருத்தவரை பிக்பாஸில் தொடங்கி அனைத்து விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இதில் காணலாம். அதுமட்டுமின்றி பல தமிழ் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களையும் இதில் காணலாம்.


Click it and Unblock the Notifications