ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி!
ரீசார்ஜ் திட்டங்களை பொருத்தவரை பெரும்பாலானோர் நீண்ட கால சலுகை வழங்கும் திட்டங்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். அதன்படி பார்க்கையில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் நீண்ட நாட்கள் பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகின்றன.

தினசரி தரவு, குரல் அழைப்பு
இந்தியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களை பொருத்தவரை தினசரி தரவு, குரல் அழைப்பு நன்மைகளையே குறிப்பிட்ட வேலிடிட்டியோடு வழங்குகிறது. நீண்ட நாட்கள் அதாவது ஆண்டு முழுவதும் தங்களது நிறுவன அழைப்புகளுக்கு வரம்பற்ற வேலிடிட்டியை வழங்குகிறது. அதன்படி ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் சிறந்த வருடாந்திர திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் வழங்கும் வருடாந்திர திட்டம்
ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வருடாந்திர திட்டம் குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.2,398 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் ரீசார்ஜ் செய்கையில் இதன் வேலிடிட்டி 365 நாட்களாக வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது ஆண்டு முழுவதும் வரம்பற்ற குரல் அழைப்புகளை கொண்டுள்ளது. அதோடு தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மைகளையும் இதில் வழங்குகிறது.

ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்கள்
அதுமட்டுமின்றி ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. கூடுதலாக ஜீ 5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக் ஆகியவைகளின் இலவச அணுகல்களை வழங்குகிறது. இதில் இலவச ஹெலோடியூன்களையும் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் ஷா அகாடமியிலிருந்து இலவச ஆன்லைன் வகுப்புகளையும், ஃபாஸ்ட் டேக்கிற்கு ரூ .150 கேஷ் பேக் நன்மையையும் வழங்குகிறது.

வோடபோன் வருடாந்திர திட்டம்
வோடபோன் வருடாந்திர திட்டம் குறித்து பார்க்கையில் இதன் விலை ரூ.2,399 ஆகும். இந்த திட்டம் வேலிடிட்டியும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வரம்பற்ற குரல்அழைப்புகளையும் வழங்குகிறது. தரவு நன்மை குறித்து பார்க்கையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ரூ .999 மதிப்புள்ள ZEE5 சந்தா
திட்டம் கூடுதல் நன்மையாக ரூ .499 மதிப்புள்ள இலவச வோடபோன் ப்ளே சந்தாவும், ரூ .999 மதிப்புள்ள ZEE5 சந்தாவும் கிடைக்கும் உள்ளிட்டவைகளையும் வழங்குகிறது.

ஜியோ வருடாந்திர திட்டம்
ஜியோ வருடாந்திர திட்டமும் ரூ.2399-க்கு வழங்குகிறது. இந்த திட்டமும் 365 நாட்கள் செல்லுபடியாகும், இதில் கிடைக்கும் முழு காலத்திற்கும் 365 நாட்கள் செல்லுபடியாகும் தரவு நன்மையை வழங்குகிறது. அதாவது ஒருநாளுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ-டூ-ஜியோவில் வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது.

365 நாட்கள் செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1999 திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும், இதில் வாடிக்கையாளருக்கு தினசரி 250 நிமிட பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லபடியாகும், இது தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதோடு ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் 60 நாட்களுக்கு இலவ அணுகல் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications