65 இன்ச் Smart TV வெறும் ரூ.30,000 விலையிலா? ஆஃபர்னா இப்படி இருக்கனும்.. லட்ச ரூபாய் TV மீது 67% தள்ளுபடி..
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது. அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வாங்க கிடைக்கும் சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகைகளை (Best offersand discounts) பற்றி நாம் தினசரி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று நம்பவே முடியாத விலைக்கு 65" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்கள் வீட்டில் புதிதாக டிவி வாங்கும் எண்ணம் இருக்கிறதென்றால், 32" இன்ச் (32 inch smart tv), 43" இன்ச் (43 inch smart tv) அல்லது 55" இன்ச் (55 inch smart tv) என்று சிறிய மாடலை வாங்க திட்டமிடுவதை நிறுத்திவிட்டு, உங்கள் வீடு ஹாலில் ஒரு மினி தியேட்டர் (mini theater) அளவில் பிரமாண்டமான ஒரு ஸ்மார்ட் டிவியை நிறுவ உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலிவு விலையில் 65" இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க வாய்ப்பு:
32" இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கும் விலையில் இப்போது உங்களால் 65" இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியுமென்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே, உண்மை தான். இப்போது வெறும் ரூ. 30,000 விலை புள்ளியில் உங்களால் இப்போது புதிய 65" இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். இந்த 65" இன்ச் ஸ்மார்ட் டிவியின் (65" inch Smart TV) அசல் விலை ரூ. 1,20,990 ஆகும்.
ஆனால், இன்று நடைபெறும் பிளிப்கார்ட் சலுகையில் ஒரு பகுதியாக நீங்கள் இந்த 65" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவியைவெறும் ரூ. 38,999 விலையில் வாங்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலனது TCL நிறுவனத்திற்கு சொந்தமான iFFALCON by TCL U62 65 inch Ultra HD (4K) LED Smart Google TV மாடலாகும்.
ரூ. 38,999 விலையில் iFFALCON by TCL U62 65 inch Ultra HD (4K) LED Smart Google TV :
இந்த iFFALCON by TCL U62 65 inch Ultra HD (4K) LED Smart Google TV ஸ்மார்ட் டிவி மாடல் பேசல் லெஸ் டிஸைனுடன் வருகிறது. மிகவும் மெல்லிய டிவி பார்டர் லைன்னை இந்த டிவி கொண்டிருக்கிறது. இது HDR 10 சப்போர்ட் உடன் அல்ட்ரா எச்டி 4K (Ultra HD 4K) ஸ்மார்ட் டிவியாக வருகிறது.
இது 24W டால்பி ஆடியோ (24W Dolby Audio) ஆதரவையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் டிவி (Google TV) ஆதரவுடன், வாயிஸ் கண்ட்ரோல் (Voice control) ஆதரவு, மற்றும் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் (smart remote control) ஆதரவுடன் வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி தற்போது வெறும் ரூ. 38,999 என்று சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் மீது 67% விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டிற்கு ஒரு பெரிய டிஸ்பிளே டிவியை மிக குறைந்த விலையில் வாங்க நீங்கள் விரும்பினால், இந்த TCL பிராண்டின் iFFALCON ஸ்மார்ட் டிவி ஒரு ஆகச்சிறந்த தேர்வாக அமைகிறது.


Click it and Unblock the Notifications







