பெட்ரூமுக்கும் சேர்த்து 2 டிவி வாங்குவீங்க.. அவ்ளோ ஆஃபர்.. வெறும் 12,999 விலையில் கோடாக் 40 இன்ச் டிவி!
அமேசான் (Amazon) நிறுவனத்தின் அமேசான் டிவி அப்கிரேட் டேஸ் சேல் (Amazon TV Upgrade Days Sale) விற்பனையில் 40 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவியை மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.
இப்போதெல்லாம், கம்மி விலை டிவி என்றாலே 32 இன்ச் மாடல்கள் மீதே மக்களின் கவனம் செல்கிறது. ஆனால், 40 இன்ச், 43 இன்ச் டிவிகளே ரூ.15,000க்கும் கீழ் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆகவே, நீங்கள் ரூ.10,000 பட்ஜெட்டில் 32 இன்ச் டிவி வாங்குவதைவிட கூடுதலாக கொஞ்சம் செலவு செய்து 40 இன்ச் டிவிகளையே வாங்கிவிட முடியும். இந்த மலிவான விலைப் பட்டியலில் கோடாக் நிறுவனத்தின் டிவிகளே நல்ல அம்சங்களை கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற கோடாக்கின் 40 இன்ச் (40SE5003BL) மாடல் டிவியானது இப்போது, அமோசன் (Amazon) தளத்தில் அதிரடி தள்ளுபடியில் வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிவியின் முழு அம்சங்கள் என்ன? எந்த வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி கிடைக்கிறது? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
கோடாக் 40 இன்ச் டிவி அம்சங்கள் ( KODAK 40 inch TV Specification): இந்த டிவி 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஏ+ (A+) கிரேடு எல்இடி டிஸ்பிளேவாகும். இதனால் வீடியோ குவாலிட்டி மிகுந்த தரமாக இருக்கும். அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080p வீடியோ சப்போர்ட் வருகிறது.
178 டிகிரி வியூ ஆங்கிள் (Viewing Angle) கிடைக்கும். 9 அடி தொலைவில் இருந்து டிவியை பார்த்தாலும், வீடியோ குவாலிட்டி நன்றாக இருக்கும் வகையில் டிஸ்பிளேவின் தரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் இன்டர்நெட் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக வை-பை (Wi-Fi), ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Zee5), ஈராஸ்நவ் (Eros Now), சோனிலிவ் (SonyLiv), யூடியூப் (Youtube) ஆகிய ஆப்கள் வருகின்றன. 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 எச்டிஎம்ஐ போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோடாக் டிவி லினக்ஸ் (Linux) ஓஎஸ் கொண்டுள்ளது. அதோடு மாலி 450 ஜிபியு (Mali-450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த கிராபிக்ஸ் கார்டு டிவியில் கேம் விளையாடுபவர்களுக்கு நல்ல வீடியோ அவுட்புட் கொடுக்கும். 0.5 ஜிபி ரேம் + 4 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு ஐஆர் (IR) ரிமோட் வருகிறது. 30 W ஸ்பீக்கர் அவுட் புட் கிடைக்கும். இதற்கு எம்பி3 (Mp3) மற்றும் டபுள்யூஎம்ஏ (Wma) ஆடியோ சப்போர்ட் வருகிறது.
மேலும், ஹை பிரைட்னஸ் டிஸ்பிளே (High Brightness Display), வைடு கலர் காமட் ( Wide Color Gamut), டிஜிட்டல் ஆடியோ என்ஹான்ஸர் (Digital Audio Enhancer) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டிவியை ஆர்டர் செய்தால், டிவி உள்பட 1 ரிமோட், 1 யூசர் மேனுவல், 2 பேட்டரி மற்றும் வால் மவுண்ட்டிங் ஆங்கிள் கொடுக்கப்படும்.
இந்த கோடாக் 40 இன்ச் டிவியின் விலை ரூ.17,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அமேசானில் ரூ.13,999க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும், சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே கார்டில் இஎம்ஐயில் வாங்கினால், ரூ.1000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், எச்டிஎப்சி பேங்க் கார்டுகளுக்கும் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.12,999க்கு இந்த டிவியை வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








