'நோக்கியா' அடுத்த வருஷம் 'நாங்க' தான்..!!

Posted By:

தொழில்நுட்ப சந்தையில் ஒரு காலத்தில் சிங்க நடை போட்ட நோக்கியா நிறுவனம், நீண்ட இடைவெளிக்கு பின் அடுத்த ஆண்டு வாக்கில் மீண்டும் பழைய கம்பீரத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிரடியாய் மொபைல் போன்களை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின் சந்தையில் களமிறங்கும் நோக்கியா நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில் தயாரித்து வைத்திருக்கும் சில கான்செப்ட் கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா பவர் ரேன்ஜர்

நோக்கியா பவர் ரேன்ஜர்

விண்டோஸ் போன் 8.1 மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 என இரு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ள கருவி தான் நோக்கியா பவர் ரேன்ஜர்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர், 5.1 இன்ச் 2கே டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 24.2 ப்யூர்வியூ கேமரா மற்றும் 512 ஜிபி ரோம் வழங்கப்படலாம்.

நோக்கியா ஸ்வான்

நோக்கியா ஸ்வான்

வியட்நாம் வடிவமைப்பாளரின் கற்பனையில் உருவாகியிருக்கும் ஸ்மார்ட்போன்+டேப்ளெட் சேர்ந்த கருவி தான் நோக்கியா ஸ்வான்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

5.3 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம். 42 எம்பி ப்ரைமரி கேமரா, இன்டெல் குவாட்கோர் சிபியு வழங்கப்படலாம்.

நோக்கியா ஈ1

நோக்கியா ஈ1

மற்ற லூமியா கருவிகளுடன் சிறிதும் தொடர்பில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி தான் நோக்கியா ஈ1.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

4.95 இன்ச் திரை, ஃபுல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

நோக்கியா என்1

நோக்கியா என்1

ஏற்கனவே நோக்கியா என்1 டேப்ளெட் வெளியானது அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் இது நோக்கியா எந் 1 ஸ்மார்ட்போன். சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டு வந்த இந்த கருவியானது அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கலாம் என முன்பு கூறப்பட்டிருந்தாலும், அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதால் இந்த கருவி பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளமும் 41 எம்பி ப்ரைமரி கேமராவும் கொண்டிருக்கலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இது சந்தையில் தற்சமயம் வரை கசிந்திருக்கும் நோக்கியா கருவிகள் குறித்த எதிர்பார்ப்பு தொகுப்பு தவிற இவை நிச்சயம் வெளியாகும் என்பது குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Best Nokia smartphone concepts to come 2016. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot