Home
News

ரூ.10,000 விலை.. பெஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன்கள் இதான்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி பவர்புல்..

இந்தியாவில் ரூ. 10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ரூ.10,000 பட்ஜெட்டில் எது பெஸ்ட் பெர்பார்மென்ஸ் போன், பவர்புல் போன் என்பதை இந்த பதவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ரெட்மி 9A (Redmi 9A):
Redmi 9A ஒரு சூப்பர் பட்ஜெட் சாதனமாகும். இதுவொரு என்ட்ரி லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. உங்கள் பணத்தை அதிக செலவாகாமல் சிறந்த அம்சங்களை ஒரே போனில் கிடைக்க செய்கிறது. இது MediaTek Helio G25 சிப்செட் மற்றும் 6.53" இன்ச் IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அத்தியாவசிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் மலிவு விலையில் இது பெஸ்ட் சாதனம்.

ரூ.10,000 விலை.. பெஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன்கள் இதான்..

ரியல்மி C11 (Realme C11):
இது பட்ஜெட்டில் பவர்புல் ஸ்மார்ட்போனாக வருகிறது. இந்த சாதனம் MediaTek Helio G35 சிப்செட் உடன் 6.5" இன்ச் IPS LCD டிஸ்ப்ளே வை கொண்டுள்ளது. இது டூயல் கேமரா அமைப்பு உடன் வருகிறது. பாஸ்ட் சார்ஜிங் உடன் சிறந்த பேட்டரி திறனை வழங்குகிறது. Realme C11 ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 10,000 பட்ஜெட்டில் சிறந்த அம்சங்களை பேக்கேஜ் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A (Infinix Smart 5A):
Infinix Smart 5A ஆனது, மீடியா டெக் ஹீலியோ A20 சிப்செட் மற்றும் 6.52" இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டு வருகிறது. ரூ. 10,000 பட்ஜெட் பிரிவில் இது வலுவான போட்டியாளராக திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போனும் கூட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. இது ரூ. 10,000 பட்ஜெட்டில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் ஸ்மார்ட்போன் சாதனமாக வருகிறது.

சாம்சங் கேலக்ஸி M02s (Samsung Galaxy M02s):
மலிவு விலையில் பெஸ்ட் பிராண்டட் போன் என்றால் அது இந்த சாதனம் தான். Samsung Galaxy M02s ஆனது பட்ஜெட் பிரிவுக்கு தரத்திற்கான பிராண்டின் நற்பெயரைக் கொண்டுவருகிறது. இது ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் 6.5" இன்ச் PLS TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமராவை கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. நம்பகமான பேட்டரி உடன் நீங்க ஆயுளை வழங்குகிறது.

ரூ.10,000 விலை.. பெஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன்கள் இதான்..

அதிக செலவு இல்லாமல் பட்ஜெட் விலைக்குள் Samsung பிராண்டில் இருந்து போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாதனமாகும். சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களுக்கு இது ஒரு பெஸ்ட் விருப்பமாக அமைகிறது.

மைக்ரோமேக்ஸ் இன் 1B (Mircomax In 1B):
மைக்ரோமேக்ஸ் இன் 1B சாதனம் ரூ. 10,000 விலையில் பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. இது MediaTek Helio G35 சிப்செட் மற்றும் 6.52" இன்ச் HD+ டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இந்த சாதனம் மலிவு விலையில் பாராட்டத்தக்க செயல்திறனை வழங்குகிறது. இது டூயல் கேமரா அமைப்புடன் பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாகத் திகழ்கிறது. இது குறிப்பிடத்தக்க தேர்வாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
best mobile under rs 10000 samsung micromax redmi realme infinix smartphones to buy now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X