ரூ.15,000 முதல் 1 லட்சம் விலைக்குள் பெஸ்ட் Mobile மாடல் இது தானா? உடனே யோசிக்காம வாங்கலாம்!
ஸ்மார்ட்போன் (Smartphone) என்ற சாதனம் இப்போது எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. மொபைல் போன்களின் தேவை இப்போது முன்பை விட அதிகமாகிவிட்டது. பல பட்ஜெட் செக்மென்ட்டில் இப்போது மொபில்கள் வாங்க கிடைக்கின்றன.
ரூ.15,000 முதல் ரூ.1,50,000-திற்கு மேல் விலை வரை இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன. ஒவ்வொரு விதமான தேவைக்கு ஏற்ப, பல விலை பட்டியல்களில் சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டும் பெஸ்டாக திகழ்கின்றன. ரூ.15,000 முதல் ரூ.1,50,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்களை இங்கு உங்களுக்காக தொகுத்து பட்டியலிட்டுள்ளோம்.

ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்:
ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் எது என்று பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி M14 5ஜி (Samsung Galaxy M14 5G) சாதனம் பெஸ்டாக தெரிகிறது. இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமான பட்ஜெட் செக்மென்ட்டாக இந்த ரூ.15,000 விலை பிரிவு திகழ்கிறது. Samsung Galaxy M14 5G சாதனம் 90Hz LCD FHD+ டிஸ்பிளேவுடன் Exynos 1330 சிப்செட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது?
இந்த விலை பிரிவின் கீழ், போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி (Poco X5 Pro 5G) பெஸ்டான தேர்வாக தேர்வாகியுள்ளது. இந்த போன் 120Hz HDR 10+ டிஸ்பிளேவுடன் டால்பி விஷன் உடன் வருகிறது. இது 108MP கேமராவுடன் Snapdragon 778G சிப்செட்டை கொண்டுள்ளது. இது 67W பாஸ்ட் சார்ஜிங் உடன் இயங்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

ரூ.40,000 விலையில் கிடைக்கும் பெஸ்ட் போன் இது தானா?
இந்த பட்ஜெட் செக்மென்ட்டில் OnePlus 11R 5G ஸ்மார்ட்போன் பெஸ்ட் சாதனமாக திகழ்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.39,999 முதல் துவங்குகிறது. இது Snapdragon 8+ Gen 1 என்று சக்தி வாய்ந்த சிப்செட் உடன் செயல்படுகிறது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. 6.74' இன்ச் வளைந்த டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
ரூ.60,000 விலையில் வாங்க பெஸ்ட் சாய்ஸ் இது தானா?
ரூ.60,000 விலை பிரிவில் பெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக OnePlus 11 5G திகழ்கிறது. உங்களுக்கு ஒரு பவர்புல் ஆன ஸ்மார்ட்போன் வேண்டுமென்றால், கட்டாயம் நீங்கள் இந்த போனை தான் தேர்வு செய்ய வேண்டும். இது 120Hz கொண்ட வளைந்த AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வருகிறது. 0 முதல் 100% சார்ஜ்ஜை 30 நிமிடங்களில் நிரப்புகிறது.

பெஸ்ட் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் எது தெரியுமா?
பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் என்றால், இது ரூ.1,50,000 விலை பிரிவுக்குள் வருகிறது. இந்த விலை பிரிவில் Samsung Galaxy S23 Ultra 5G ஸ்மார்ட்போன் தான் ஆகச்சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக திகழ்கிறது. இது ஐபோன் 14 ப்ரோ சாதனத்தை விட பெஸ்ட் சாதனமாக பார்க்கப்படுகிறது. டன் கணக்கில் பிரீமியம் அம்சங்களை இது பேக் செய்துள்ளது. உங்களுக்கு விலை ஒரு பிரச்சனை இல்லை என்றால், தாராளமாக இதை நீங்கள் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications