Home
News

ரூ.10,000 விலைக்குள் 5G.. Ai அம்சம்.. 1TB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா.. எல்லாமே இருக்கு.. இந்த 5 மாடலில் இதான் டாப்.

ரூ.10,000 விலைக்குள் (mobile phones under Rs 10,000) பெஸ்ட் கேமரா (best camera), சூப்பர் சிப்செட் (chipset) மற்றும் திறமையான பெர்பார்மென்ஸ் (performance) உடன் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த பட்டியலில் உள்ள மாடல்களை பாருங்கள்.

1. ரெட்மி ஏ2 (Redmi A2):
இந்த ரெட்மி ஏ2 (Redmi A2) ரூ. 6,799 என்ற விலையில் அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது. இது மீடியாடெக் டைமென்சிட்டி ஜி36 (MediaTek Helio G36) சிப்செட் உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் + 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 400 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.5' இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ரூ.10,000 விலைக்குள் 5G.. Ai அம்சம்.. 1TB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா..

இது 8MP டூயல் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜர் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு (MicroSD card) வழியாக 1TB ஸ்டோரேஜ் வரை ஆதரிக்கிறது. இது டூயல் 4G நானோ சிம் அம்சத்தை கொண்டுள்ளது.

2. ரெட்மி 12சி (Redmi 12C):
இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ரூ.8,299 விலையில் கிடைக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85) சிப்செட் உடன் 4ஜிபி ரேம் + 3ஜிபி (Virtual RAM) LPDDR4x உடன் வருகிறது. இது 50MP AI டூயல் கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரியை 10W சார்ஜர் உடன் பேக் செய்கிறது. இது அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது.

3. சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04):
இது ரூ.8,499 விலையில் அமேசான் வெளியக வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் 2.3GHz வேகத்தில் இயங்கும் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ பி35 (MediaTek Helio P35) சிப்செட் உடன் இயங்குகிறது. இது 13MP + 2MP டூயல் கேமரா அமைப்பு மற்றும் 5MP முன்பக்க செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த போன் HD+ 720 x 1600 பிக்சல்கள் கொண்ட 6.5' இன்ச் டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது 5000mAh பேட்டரி உடன் வருகிறது.

4. ரியல்மி நர்ஸோ என்53 (Realme narzo n53):
ரியல்மி நர்ஸோ என்53 (Realme narzo N53) இப்போது ரூ.8,999 விலையில் அமேசான் வழியாக கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 33W SUPERVOOC சார்ஜிங்குடன் 5000mah பேட்டரி உடன் வருகிறது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில் இது 50MP AI கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ரியல்மி நர்ஸோ என்53 ஸ்மார்ட்போன் யூனிஸாக் டி612 (Unisoc T612) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

5. ஐடெல் பி55 5ஜி (itel P55 5G):
ஐடெல் பி55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 9,999 விலையில் வருகிறது. இது ஒரு டைமென்சிட்டி 6080 சிப்செட் உடன் வருகிறது. இது NRCA ஆதரவுடன் சக்திவாய்ந்த 5G இணைப்பை வழங்குகிறது. ஆம், இதுவொரு 5ஜி போனாகும். இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 90 Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.6' இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது UMCP ஸ்டோரேஜ், ஆவியான சாட் ஜிபிடி அசிஸ்டன்ட் (Aivana Chat GPT Assistant), 180Hz டச் சாம்ப்ளிங் ரேட் அம்சத்துடன் வருகிறது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP AI டூயல் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா அம்சம் இதில் உள்ளது. இந்த விலையில் வேறு எந்த போனிலும் கிடைக்காத அம்சங்கள் இந்த ஐடெல் பி55 5ஜி போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Best mobile phones to buy this November 2023 under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X