ரூ.25,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.!

|

ஸ்மார்ட்போன்கள் வாங்க பண்டிகை காலத்தை விட சரியான நேரம் அமையாது. ஏனெனில் அப்போது தான் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் சிறந்த ஆபர்கள் கிடைக்கும். மேலும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பரிசுகளை வழங்குவதற்குமான சிறந்த நேரம் இதுவாகும். ஒருவேளை நீங்கள் ரூ.25,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை
தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

 சந்தையில் கிடைக்கும் ரூ.25,000-க்கு கீழ்

தற்போது சந்தையில் கிடைக்கும் ரூ.25,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே அதிக சிரமமின்றி சிறந்த தேர்வுகளை நீங்கள் நிகழ்த்தலாம்.

விவோ வி20 ஸ்மார்ட்போன்

விவோ வி20 ஸ்மார்ட்போன்

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி20ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.24,990 க்கும், அதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.27,990 க்கும் வாங்க கிடைக்கும்.

48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ வி20 ஸ்மார்ட்போன்

விவோ வி20 ஸ்மார்ட்போன்

விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி20 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999-விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம்25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இதனுடன் தொகுக்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தி 115 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யலாம் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்51 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ப்ளூ மார்பிள் மற்றும் கிரே ஓனிக்ஸ் என்ற இரண்டு வண்ண வகைகளில் வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் அம்சங்கள்

6.4 இன்ச் முழு எச்டி 10 அமோலேட் டிஸ்ப்ளே
90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
6ஃ8ஃ 12 ஜிபி ரேம் மற்றும்
64ஃ128ஃ 256 ஜிபி சேமிப்பு
48எம்பி சோனி சென்சார்
8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
5எம்பி சென்சார்
2எம்பி மேக்ரோ சென்சார்
32எம்பி 10 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா
30று வார்ப் சார்ஜ்
4115 எம்.ஏ.எச் பேட்டரி

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது.இந்த சாதனத்தில்accelerometer, ambient light, gyroscope, மற்றும் proximity போன்றவைகள் உள்ளன. உடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

 ரியல்மி  7 ப்ரோ அம்சங்கள்

ரியல்மி 7 ப்ரோ அம்சங்கள்

6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இரட்டை 4G VoLTE
Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
புளூடூத் 5,
GPS, NavIC
USB Type-C போர்ட்
65W சூப்பர் டார்ட் சார்ஜ்
4500 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி நிறுவனத்தின் அசத்தலான ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு வாங்க கிடைக்கிறது.

டிஸ்பிளே: 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகண்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார்
செல்பீ கேமரா: 20எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
27வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11,
ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்,
ப்ளூடூத் வி5.0

Best Mobiles in India

English summary
Best Mobile Phone Under 25000 to buy in 2020 And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X