Home
News

ரூ.25,000-குள் இந்த 4 போன் தான் பெஸ்ட்! இதுல எந்த போனை வேணுனாலும் வாங்குங்க! பெஸ்ட் காரணம் இது தான்!

ஸ்மார்ட்போன் என்பது இப்போது மிகவும் முக்கியமான ஒரு சாதனமாகிவிட்டது. தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் வேலை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அனைவராலும் இந்த சாதனம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. சிறந்த மாடல் போன்களின் எண்ணிக்கையே சில பல ஆயிரங்களைத் தாண்டுகிறது.

இதிலிருந்து உங்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை எப்படி தேர்வு செய்வதென்றே குழப்பம் உங்களுக்கும் நிச்சயமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், உங்களின் தேர்வுகளை எளிமையாக்க, இந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 25,000 விலை புள்ளியில் வாங்க கிடைக்கும் பெஸ்டான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

ரூ.25,000-குள் இந்த 4 போன் தான் பெஸ்ட! எந்த போனை வாங்கலாம்?

உங்கள் தேவை என்னவாக இருந்தாலும், அதை இந்த 4 ஸ்மார்ட்போன் மாடல்களும் கட்டாயம் பூர்த்தி செய்யும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. சரி, வாருங்கள் என்ன விலையில், எந்தெந்த ஸ்மார்ட்போன் சாதனம் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று பார்க்கலாம்.

1. OnePlus Nord CE 3 Lite 5G
OnePlus Nord CE 3 Lite 5G இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், நீங்கள் ரூ.25,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் இனி இது தான். ஏப்ரல் 11ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது. இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.19,999 விலையில் வருகிறது. இது லைம் க்ரீன் நிறத்தில் வருகிறது. இது புதிய 108MP பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.

டிஸ்ப்ளே ஒரு 120Hz IPS LCD பேனல் உடன் வருகிறது. இது பெரிய 5000mah பேட்டரியை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மாடலைப் போலவே இது அமைந்திருக்கிறது. ஆனால் 67W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.

ரூ.25,000-குள் இந்த 4 போன் தான் பெஸ்ட! எந்த போனை வாங்கலாம்?

2. Poco X5 Pro 5G

இந்த Poco மாடலும் 108MP பிரைமரி கேமராவுடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 778G சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதன் டிஸ்பிளே 120Hz HDR 10+ டிஸ்ப்ளே டால்பி விஷன் ஆதரவுடன் வருகிறது. இதன் தரமான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களால் இந்த ஃபோனில் மல்டிமீடியா அனுபவம் மிகவும் சிறப்பாக உள்ளது. IP53 மதிப்பீடு, 5,000mAh பேட்டரி மற்றும் 67W வேகமான சார்ஜிங் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இதன் விலை ரூ.22,999 மட்டுமே.

3. Realme 10 Pro+ 5G
இந்த பட்டியலில் 108MP பிரைமரி கேமராவைக் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போன் Realme 10 Pro+ 5G ஆகும். இது AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வழங்குகிறது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 5,000mAh பேட்டரியை 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கொண்டுவருகிறது.

ரூ.25,000-குள் இந்த 4 போன் தான் பெஸ்ட! எந்த போனை வாங்கலாம்?

4. Redmi Note 12 Pro 5G

ரெட்மி நோட் 12 ப்ரோ சிறந்த 10-பிட் AMOLED டிஸ்ப்ளேக்களில் ஒன்றைப் பெறுகிறது. இது Dimensity 1080 சிப்செட் உடன் வருகிறது. இதன் கேமரா பற்றி பேசுகையில், இது 50MP சோனி IMX766 பிரைமரி பின்புற கேமராவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.24,999 மட்டுமே.

இந்த மாடல்கள் அனைத்தும், பெஸ்டான ஸ்பெக்ஸ் அம்சத்துடன் வருகிறது. உங்கள் பட்ஜெட் ரூ.25,000 என்றால் கட்டாயமாக இந்த 4 மாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு மாடலை, நீங்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Best Mobile Phone To Buy Under Rs 25000 In This April Month 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X