Home
News

அப்படி போடு.. தீபாவளிக்கு போன் வாங்கப்போறீங்களா? அப்போ இந்த 6 போனை தான் வாங்கணும்.. இதுதான் பெஸ்ட்..

பண்டிகை காலம் என்றாலே புதிய ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்து அன்புக்குறியவர்களுக்கு பரிசு வாங்கித் தந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது நம் வழக்கம். இந்த வருடத்தின் தீபாவளி பண்டிகைக்கு யாருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசித்துவிடீர்களா?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உங்களுக்கு பிடித்த நெருக்கமானவர்களுக்கு என்ன பரிசு வாங்கித் தரலாம் என்று தேடுதல் வேட்டையில் இந்நேரம் இறங்கியிருப்பீர்கள். உங்கள் வேலையை சுலபமாக்குவதற்காகத்தான் இந்த பதிவு. இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வின் அத்தியாவசிய அங்கமாகவே மாறிவிட்டன மொபைல் (Mobile) போன்கள்.

அப்படி போடு.. தீபாவளிக்கு போன் வாங்கப்போறீங்களா? இந்த 6 போனை பாருங்க..

பல்வேறு கேட்ஜெட்டுகளில் இருக்கும் அம்சங்கள் ஒரே ஸ்மார்ட் போனில் வந்துவிடுவதால் பெரும்பாலான மக்கள் அதனை ஒரு முதலீடாக நினைக்கின்றனர். இந்த தீபாவளி பரிசாக உங்கள் பிரியமாவர்களுக்கு ஸ்மார்ட் போனை பரிசளிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான சில சிறந்த தேர்வுகள் இதோ..

1. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15):
ஐபோன் பயனர்கள் அதிகரித்து விட்ட நிலையில் அவ்வபோது புதிய புதிய மாடல்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 தீபாளிக்கு ஒரு தரமான பரிசாக இருக்கும். ஐபோன் 15-ன் பேஸ் வேரியண்ட்டான (Base variant) 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ. 79,900க்கு விற்கப்படுகிறது. சலுகைகளுடன் சேர்த்து குறைந்தபட்சமாக ரூ. 75,000க்கு ஐபோன் 15யை இந்த தீபாவளிக்கு வாங்களாம்.

2. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14):
ஐபோன் 15ஐ போலவே ஐபோன் 14ம் தீபாவளிக்கு பரிசளிக்க ஒரு நல்ல தேர்வு என்றே கூறலாம். பெரிய டிஸ்ப்ளே, அதிக பேட்டரி லைஃப்-போடு வரும் இந்த ஸ்மார்ட் போன் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது ரூ. 63,999க்கு விற்கப்படுகிறது.

3. ஒன்ப்ளஸ் ஓபன் (Oneplus Open):
ஃப்ளிப் (Flip) மற்றும் ஃபோல்டபுல் (Foldable) ஸ்மார்ட் போன்கள் தான் தற்போதைய ட்ரென்ட். அந்த வரிசையில் புதிதாக இறங்கியுள்ள ஒரு ஃபோல்டபுல் ஸ்மார்ட் போன் தான் ஒன்ப்ளஸ் ஓபன். சிறந்த செயல்பாடு, தரமான கேமரா அம்சம் மற்றும் பெரிய திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 1,39,999. என்னதான் இதன் விலை ஒரு லட்சத்தை கடந்திருந்தாலும் சாம்சங்கின் ஹை-என்ட் (High-end) ஃபோல்டபுல் ஸ்மார்ட் போன்களின் விலையை ஒப்பிடும்போது ஒன்ப்ளஸ் ஓபனின் விலை ஏற்புடையது தான்.

4. சாம்சங் கேலக்ஸி-Z ஃப்ளிப் 5 (Samsung Galaxy Z Flip 5):
மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃப்ளிப் ஸ்மார்ட் போன்களில் சாம்சங் கேலக்ஸி-Z ஃப்ளிப் 5 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ரூ. 99,999க்கு விற்கப்படும் இந்த ஃபோல்டபுல் ஸ்மார்ட் போன் பெரிய டிஸ்ப்ளே, ஃப்லாக்‌ஷிப் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 SoC (Flagship SnapDragon 8 Gen 2 SoC) ஆகிய அம்சங்களுடன் காம்பாக்ட் டிசைனில் (Compact Design) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சமாக IPX8 வாட்டர் ரெஸிஸ்டென்ஸ் ரேட்டிங்-ஐ (Water Resistance Rating) கூறலாம்.

5. கூகுள் பிக்ஸல் 8 (Google Pixel 8):
தங்கள் ஸ்மார்ட் போனில் சிறந்த கேமரா அம்சம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு கூகுள் பிக்ஸல் சரியான தேர்வாக இருக்கும். டென்சார் ஜி3 ப்ராசசர் (Tensor G3 Processor) கொண்டு செயல்படும் இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் எந்த விதமான வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படத்தை எடுத்து கொடுக்கும். கூகுள் பிக்ஸல்-ன் 128 ஜிபி வேரியண்ட் மார்கெட்டில் ரூ. 75,999க்கு விற்கப்படுகிறது.

6. சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro):
1-இன்ச் ரக சென்சார் (1-inch type sensor) போன்களில் மலிவு விலைக்கு விற்கப்படும் ஒன்று இந்த சியோமி 13 ப்ரோ. ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 SoC கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் 50 MP சோனி IMX 989 சென்சார் கொண்ட மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இதன் கேமராக்கள் உலகின் தலை சிறந்த கேமரா தயாரிப்பு நிறுவனமான லைகா-வால் (Leica) மெருகேற்றப்பட்டது. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ரூ. 74,999க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Mobile Phone To Buy This Diwali November 2023 OnePlus Samsung iPhone Xiaomi Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X