ஆஃபீஸ்ல இனி ஒருத்தரும் தூங்க கூடாது! ஊழியர்கள் அதிகமாக வாங்கும் தூக்கம் கலைக்கும் கேட்ஜெட்கள்! இதோ!
தூக்கம் என்பது மனிதனை புத்துணர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட உதவும் ஒரு கருவி. பரபரப்பான வாழ்கை முறை காரணமாக, மக்கள் தூங்கும் நேரம் குறைந்து விட்டது. தூக்கமின்மையால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதிக வேலை குறைந்த தூக்கத்தத்தால் பணிநேரத்தில் பல சமயம் ஊழியர்கள் தூங்கி வழிவதைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம்.
அளவான தூக்கம், ஒரு மனிதன் திறமையாக வேலை பார்க்க உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்த ஜப்பான் போன்ற நாடுகள், தங்களது ஊழியர்கள் பணி நேரத்தில் தூங்குவதை வரவேற்றாலும், மற்ற பல உலக நாடுகள் அதற்கு எதிராகத்தான் உள்ளது. ஊழியர்கள் பணி நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க பிரத்தியேகமான கேட்ஜெட்டுகளையும் (Office Gadgets), மொபைல் ஆப்ஸ்களையும் (Mobile Apps) கூட பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே.!

குறிப்பாக IT துறையில், இவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதாம். அப்படி என்னென்ன கருவிகள் அலுவலகங்களில் தூக்கத்தை கலைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கஃபைன் (Caffeine) உள்ள சாதனங்கள்
ஒருவரை சுறுசுறுப்பாக்க உதவுவதில் கஃபைனின் பங்கு அதிகம். இதன் காரணமாகவே பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது அலுவலக வளாகத்திலேயே டீ, காபி, ஸ்நாக்ஸ் கடைகளை அல்லது மெஷின்களை வைத்து ஊழியர்களை அவ்வப்போது சுறுசுறுப்பாக்கி வேலை வாங்குகின்றது. இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக டூத் பேஸ்ட், குளிக்கும் சோப் போன்றவற்றிலும் கஃபைனை புகுத்தியுள்ளனர். இதன் மூலம் அதிக கஃபைன் சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக அதிக கஃபைன் உடலில் கலந்து பணியாளர்களைச் சுறுசுறுப்பாக வைக்குமாம்.
2. இயர் பீஸ் (Earpiece)
பொதுவாக அதிக தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் தான் தூக்கம் வராமல் இருக்கப் பாடல் கேட்டுக்கொண்டு செல்வார்கள். ஆனால், அலுவலகத்தில் பாடல்கள் கேட்ட அனுமதிக்க முடியாது என்பதால் ஊழியர்கள் காதில் ஒரு இயர் பீஸை நிறுவனங்கள் பொருத்துகின்றனர். இந்த இயர் பீஸ் ஊழியர் அமர்ந்திருக்கும் நிலையை கண்காணிக்கும். ஒரு வேலை தூக்கம் காரணமாக அவர் அதிகமாகச் சாய்ந்தால், இந்த இயர் பீஸ் காதுகளில் ஒரு மெல்லிய அதிர்வை உருவாக்கும். இதன் மூலம் ஊழியர் தூங்காமல் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

3. மூக்கு கண்ணாடி
கண்ணுக்குத் தெரியாத சிறிய LED லைட்டுகளை கொண்டுள்ள இந்த கண்ணாடியானது, வினாடிக்கு 500 முறை கண்களின் அசைவுகளையும், ஒருவரது இமை எவ்வளவு மூடியுள்ளது என்பதையும் கண்காணிக்குமாம். ஒருவர் கண்களை மூடியிருக்கும் போது எவ்வளவு நேரம் அவரது இமை மூடியுள்ளது என்பதையும் கண்காணித்து அதற்கான பிரத்தியேக செயலியில் அதைத் தகவல்களைச் சேகரித்து வைக்குமாம்.
சிறிது கவனச்சிதறலும் அல்லது தூக்கமும் கூட உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ள கடினமான வேலைகளில் இந்த கருவி மிகவும் உதவியாக இருக்கும். இந்த கருவியை சூப்பர்வைஸர் மாதிரியானவர்கள் ஊழியர்களை கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
4. உடல் அசைவை கண்காணிக்கும் செயலிகள் (Body Movement apps)
உடல் அசைவை கண்காணிக்கும் அம்சம் கொண்ட பல மொபைல் ஆப்ஸ்கள் இப்போது ஸ்மார்ட் போன்களில் இருக்கின்றன. அவற்றை இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட் போனை உடலோடு ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உடலில் எந்த அசைவும் இல்லாதபோது இந்த செயலி பாடல் அல்லது அலாரத்தை இசைக்கும். இதன் காரணமாக ஊழியர்கள் தூங்காமல் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள்.
அலுவலக நேரத்தில் தூங்குவது நல்லதா? கெட்டதா?
மனித உடல் பாகங்கள் இயற்கையாகவே ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வடையும் தன்மை கொண்டவை. ஒருவருக்கும் போதுமான ஓய்வு கிடைத்தால் தான், அவர் சிந்தனையும் செயல்பாடும் சிறப்பாக இருக்கும் என்பது உளவியல் உண்மை. எனவே நிறுவனங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தால் ஊழியர்களின் செயல்பாடு மேலும் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றிய உங்களது கருத்து என்ன? கமெண்டில் பதிவிடுங்கள் எம்ப்லாயீஸ் (Employees).!


Click it and Unblock the Notifications