முடிவு பண்ணிட்டோம் நல்லதாவே வாங்குவோம்- இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஆகச் சிறந்த லேப்டாப்கள்!

|

சிறந்த மல்டிமீடியா அனுபவம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நீடித்த பேட்டரி உள்ளிட்ட ஆதரவோடு ஏணைய லேப்டாப்கள் இந்திய சந்தையில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் சாதனங்கள் கிடைத்தாலும் ரூ.60,000 என்ற விலைப் பிரிவில் சாதனம் வாங்குவது அதன் தரம் மற்றும் தன்மையை உறுதி செய்ய முடியும். அதன்படி இந்தியாவில் ரூ.60,000 விலைப் பிரிவில் கிடைக்கும் லேப்டாப்கள் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.60,000 விலைப் பிரிவு லேப்டாப்

ரூ.60,000 விலைப் பிரிவு லேப்டாப்

ரூ.60,000 விலைப் பிரிவில் இரண்டு புதிய அசுஸ் லேப்டாப்கள் இடம் பிடித்துள்ளது. 16 இன்ச் டிஸ்ப்ளே அளவோடு கூடிய எச்பி விக்டஸ், இன்டெல் மற்றும் ரைசன் லேப்டாப்களும் இந்த பட்டியலில் இருக்கிறது.

அதிகரிக்கும் லேப்டாப்கள் தேவை

அதிகரிக்கும் லேப்டாப்கள் தேவை

கொரோனா தொற்று பரவல் முதல் லேப்டாப்கள் தேவையானது அதிகரித்து வருகிறது. வெவ்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு லேப்டாப்கள் சந்தையில் கிடைக்கிறது. இதன்மூலம் எந்த லேப்டாப்கள் வாங்குவது என்பதில் பெரிய குழப்பம் வரலாம். அதை நிவர்த்தி செய்ய ரூ.60,000 விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த சாதனங்களின் பட்டியல் இங்கே விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

அணுஅணுவாய் செதுக்கி இருக்காங்க: பார்த்த உடன் வாங்க வைக்கும் Huawei Nova Y90 அறிமுகம்அணுஅணுவாய் செதுக்கி இருக்காங்க: பார்த்த உடன் வாங்க வைக்கும் Huawei Nova Y90 அறிமுகம்

Asus Vivobook 14 Pro OLED

Asus Vivobook 14 Pro OLED

Asus Vivobook 14 Pro OLED லேப்டாப் ஆனது 14 இன்ச் அளவுடன் கூடிய 2.8K OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. மென்மையான அனுபவத்தை வழங்கும்படியான 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் இது கிடைக்கிறது. 600 நிட்ஸ் பிரகாசம், VESA இன் டிஸ்ப்ளே எச்டிஆர் ட்ரூ பிளாக் 600 தரநிலை மற்றும் டால்பி விஷன் திறனை கொண்டிருக்கிறது. வண்ணத் துல்லியத்துக்கு Pantone ஆதரவு இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த டிஸ்ப்ளே அதீத தெளிவுத்திறனுடன் கிடைக்கும்.

16 ஜிபி ரேம் ஆதரவு

AMD Ryzen 7 5800H CPU சிப்செட் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் ஆதரவு கொண்ட இந்த லேப்டாப்பின் எடை 1.4 கிலோ ஆகும். Windows 11 ஆதரவோடு கிடைக்கும் இந்த லேப்டாப் 50WHr பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 90 வாட்ஸ் வேகமான சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இதன் விலை ரூ.59,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இனி டிரைவிங் லைசன்ஸ் காட்டினால் தான் Instagram-க்குள் அனுமதி! எதற்காக இந்த முடிவு? இது பாதுகாப்பானதா?இனி டிரைவிங் லைசன்ஸ் காட்டினால் தான் Instagram-க்குள் அனுமதி! எதற்காக இந்த முடிவு? இது பாதுகாப்பானதா?

Lenovo Ideapad Gaming 3

Lenovo Ideapad Gaming 3

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லெனோவா ஐடியாபேட் லுக் என்பது வேற லெவலில் இருக்கிறது. கேமிங் பிரியர்களை மையமாக வைத்து இந்த லேப்டாப் வெளியிடப்பட்டிருக்கிறது. ரைசன் 5 5600H உடன் கூடிய ஏஎம்டி ஜென் 3 மூலம் இது இயக்கப்படுகிறது. முழு எச்டி கேமிங் ஆதரவோடு இந்த லேப்டாப் சந்தையில் கிடைக்கிறது.

விண்டோஸ் 11 ஆதரவு

8 ஜிபி ரேம் உடன் கூடிய இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் வீதத்தை கொண்டிருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவோடு கிடைக்கும் இந்த லேப்டாப் ஆனது ரூ.59,990 என்ற விலையில் கிடைக்கிறது.

HP Victus

HP Victus

ரூ.60,000 விலை வரம்பில் சிறந்த செயல்திறன் உடன் கிடைக்கும் லேப்டாப்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சாதனமும் Ryzen 5 5600H மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேடியன் RX5500M கிராஃபிக்ஸ் ஆதரவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 16.1 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

8 ஜிபி ரேம் ஆதரவோடு 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் ஆதரவோடு 32 ஜிபி உள்சேமிப்பு வசதியை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவோடு கூடிய 70WHr பேட்டரி இதில் இருக்கிறது. இதன் இந்திய விலை ரூ.55,990 ஆகும்.

Asus Vivobook 16X

Asus Vivobook 16X

ரூ.60,000 விலைப் பிரிவு பட்டியலில் மற்றொரு அசுஸ் லேப்டாப் இடம் பிடித்திருக்கிறது. இந்த லேப்டாப்பை அசுஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அது Asus Vivobook 16X சாதனம் ஆகும். 16:10 விகிதத்துடன் கூடிய 16 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. AMD Ryzen 7 5800H கேமிங்-கிரேடு CPU ஆதரவோடு இந்த சாதனம் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும் இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.54,900 ஆகும். 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 50 WHr பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

MSI Modern 15

MSI Modern 15

MSI Modern 15 ஆனது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு ஆதரவோடு கூடிய 15.6 இன்ச் முழு முழு HD IPS LCD டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் சற்று புதிதாக இருக்கலாம் ஆனால் இந்த லேப்டாப் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. Ryzen 7 5700U மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப் ஆனது 8 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.55,990 ஆகும்.

Best Mobiles in India

English summary
Best Laptops Available Under Rs.60,000 in India: Powerful Performance, Good Multimedia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X