சூடு பறக்கும் அதிரடி விற்பனை.. ரூ.15,000 விலைக்குள் பெஸ்ட் லேப்டாப்ஸ்.. உடனே ஆர்டர் போடுங்க..
இன்டெர்நெட்டின் ஆதிக்கம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் வேலை, படிப்பு, பொழுதுபோக்கு என்று அனைத்து காரணங்களுக்காகவும் லேப்டாப் (Laptop) என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.
ஸ்மார்ட் போனைப் போலவே லேப்டாப் என்பதும் அதிக விலைக்கு தான் விற்கப்படும், சாமானிய மக்களால் அதனை வாங்க முடியாது என்ற நிலையை மாற்றி, பல முன்னணி நிறுவனங்கள் மலிவான விலைக்கு, அத்தியாவசியமான அம்சங்கள் கொண்ட தரமான லேப்டாப்புகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இப்படி குறைந்த விலைக்கு லேப்டாப்கள் விற்கப்படுவதால் தொழில்நுட்பம் சமமாக அனைவருக்கும் சென்று சேரும். மேலோட்டமாக பார்க்கும்போது இது வியாபார ரீதியாக காணப்பட்டாலும், இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து முன்னேற முடியும். அந்த வகையில் இந்திய சந்தையில் ரூ. 15000க்கு கீழ் விற்கப்படும் தரமான லேப்டாப்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விபரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
1. லாவா ஹீலியம் 14 (Lava Helium 14)
14.1 இன்ச் LED டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த லேப்டாப் 1.4 GHz இன்டெல் ஆட்டம் க்வாட்-கோர் (Intel Atom Quad-Core) x5-Z8350 ப்ராசஸர் (Processor) கொண்டு இயங்குகிறது. 2ஜிபி DDR3 ராம் (RAM) உடன் வரும் இந்த லேப்டாப்பின் ஸ்டோரேஜ் ஸ்பேசை (Storage Space) SSD கொண்டு 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
இது 2MP வெப் கேம் (Web-Cam), டுவல் ஸ்பீக்கர் (Dual Speaker), இன்டர்னல் மைக்ரோபோன் (Internal Microphone), ப்ளூடூத் v4.0, வைஃபை4 (Wi-Fi4) மற்றும் 9 மணிநேர லைஃப் கொண்ட Li-Po பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த லேப்டாப் ரூ. 14,999-க்கு ஃப்ளிப்கார்ட்டில் (Flipkart) விற்கப்படுகிறது.
2. ஏஸஸ் க்ரோம்புக் (ASUS Chromebook) C423NA-BV0523
14 இன்ச் LED டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த ஏஸஸ் க்ரோம்புக் 1.1 GHz இன்டெல் செலெரான் டுவல் கோர் (Intel Celeron Dual Core) N3350 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. 4 ஜிபி LPDDR4X ராம் உடன் வரும் இந்த லேப்டாப்பின் ஸ்டோரேஜ் ஸ்பேஸை SSD கொண்டு 64 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
வெப் கேம், பில்ட்-இன் (Built-in) ஸ்பீக்கர், பில்ட்-இன் மைக்ரோபோன், ப்ளூடூத் v4.2, வைஃபை5 மற்றும் 45W Li-அயான் (Li-Ion) பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த லேப்டாப் ரூ. 14,990 விலைக்கு ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் போர்டல் மூலம் விற்கப்படுகிறது.
3. ரிலையன்ஸ் ஜியோபுக் (Reliance JioBook) NB1112MM
11 இன்ச் HD டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த ஜியோபுக் லேப்டாப் 2 GHz மீடியாடெக் (Mediatek) MT8788 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. 4 ஜிபி LPDDR4 ராம் உடன் வரும் இந்த லேப்டாப்பின் ஸ்டோரேஜ் ஸ்பேஸை 4 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
இதுவும் 2MP வெப் கேம், ஸ்டீரியோ (Stereo) ஸ்பீக்கர், பில்ட்-இன் மைக்ரோபோன், ப்ளூடூத் v5.0, வைஃபை5 மற்றும் 8 மணிநேர பேட்டரி லைஃப் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த லேப்டாப் ரூ. 14,499க்கு அமேசான் தளத்தில் விற்கப்படுகிறது.
4. ப்ரைம்புக் 4ஜி (Primebook)
11.6 இன்ச் HD டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த லேப்டாப் 2 GHz மீடியாடெக் (Mediatek) MT8788 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. 4 ஜிபி LPDDR4 ராம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 2MP வெப் கேம், பில்ட்-இன் ஸ்பீக்கர், பில்ட்-இன் மைக்ரோபோன், ப்ளூடூத் v5.0, வைஃபை5 மற்றும் 10 மணிநேர பேட்டரி லைஃப் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த லேப்டாப் ரூ. 12,490க்கு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
5. லெனோவோ ஐடியாபேட் (Lenovo Ideapad) 3 CB 11IGL05 (82BA001PHA)
11.6 இன்ச் LED டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த லேப்டாப் 2.8 GHz இன்டெல் செலெரான் டுவல் கோர் N4020 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. 4 ஜிபி LPDDR4 ராம் உடன் வரும் இந்த லேப்டாப்பின் ஸ்டோரேஜ் ஸ்பேஸை SSD கொண்டு 64 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
வெப் கேம், பில்ட்-இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர், பில்ட்-இன் அர்ரே (array) மைக்ரோபோன், ப்ளூடூத் v4.2, வைஃபை5 மற்றும் 10 மணிநேர பேட்டரி லைஃப் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த லேப்டாப் ரூ. 10,990க்கு ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








