சொல்லி அடிக்கும் Jio.. கில்லி மாதிரி ஒரு திட்டம்.. 42ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் இலவச 5ஜி.. இன்னும் ஏராளம்..
ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் ப்ரோ நன்மைகளை சில இலவச நன்மைகளாக வழங்குகிறது. ஜியோ வழங்கும் ஜியோசாவன் ப்ரோ & 5ஜி அன்லிமிடெட் நன்மை விபரங்கள் இதோ.
இதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஜியோவின் சில திட்டங்கள் ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சேவைக்கான இலவச சந்தாவுடன் வருகின்றன. மியூசிக் பிரியர்களுக்கு ஜியோ சாவன் ப்ரோ சந்தா மிகவும் பிடித்தமான ஒரு சேவையாக இருக்கிறது. இத்துடன், ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு கூடுதலாக இப்போது இலவசமாகவும் அன்லிமிடெட்டாகவும் 5ஜி டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

இங்கு நாம் பேசும் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வெறும் 269 ரூபாய் விலையில் வருகிறது. பல ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், சில முக்கியமான திட்டங்களுடன் கிடைக்கும் அல்டிமேட் ஆன நன்மைகளை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். குறிப்பாக, சில குறைந்த விலை திட்டங்களின் பின்னணியில் கிடைக்கும் நன்மைகளை கவனிக்க தவறிவிடுகிறோம்.
இப்படி பெரும்பாலான ஜியோ பயனர்களால் கவனிக்க தவறிய ஒரு திட்டம் தான் இந்த ஜியோவின் ரூ. 269 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு இந்த விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 42ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஜியோவின் இந்த ரூ. 269 ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.
இதில் ஜியோசாவன் ப்ரோவின் இலவச சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் வெறும் 28 நாட்கள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் இது மொத்தமாக 42 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
உங்களுக்கு இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, உங்களுடைய டேட்டா வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். குறிப்பிட்ட வரம்பிற்கு பிறகு, டேட்டா வேகத்தை குறைப்பதை டெலிகாம் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இது தவிர, இந்த திட்டத்தில் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான இலவச அணுகலையம் வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள். இந்த திட்டத்தின் கீழ், ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி (5G) டேட்டாவையும் இலவசமாக வழங்குகிறது. இந்த நன்மையை பெற உங்களுக்கு சில தகுதிகள் இருப்பது அவசியம். அதில் கட்டாயமாக, நீங்கள் வசிக்கும் பகுதியில் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் சேவை இருக்க வேண்டும்.
அதேபோல், உங்களிடம் 5ஜி இணக்கத்துடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் போன்றே, ஜியோ நிறுவனம் இன்னும் சில திட்டங்களை ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவுடன் வழங்குகிறது. ஜியோவின் ரூ.529, ரூ.739, ரூ.589 மற்றும் ரூ.789 திட்டங்களுடன் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








