சில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்பு

|

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தங்களது வாடிக்கையாளருக்கு வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கும், வீட்டில் இருந்தே பணி புரிபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100நிமிட இலவச அழைப்புகள்

100நிமிட இலவச அழைப்புகள்

வெளிவந்த அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் 100நிமிட இலவச அழைப்புகள் மற்றும 100எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என்றும், இந்த நன்மைகள் வரும் ஏப்ரல் 17வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்கம்மிங் வாய்ஸ் கால்

இன்கம்மிங் வாய்ஸ் கால்

மேலும் ஜியோபோன் வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலாவதியான பிறகும் கூட இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஏராளமான பயனர்கள் தற்போது உள்ளனர் என்றும் இந்த டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ்

யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ்

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நாட்களில் வாடிக்கையாளர்கள் சில்லறை கடைகள் வழியாக ரீசார்ஜ் செய்வது மிகவும் கடினம், எனவே இதை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் போன்ற ரீசார்ஜ் செய்வதற்கு மாற்று சேனல்களை வழங்கியுள்ளது.

100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்

100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்

ஆனாலும் கூட சில பயனர்களார் தங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், ஜியோ அறிவித்துள்ள இலவச 100நிமிடங்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்கள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் உதவியாக இருக்கும்.

Recharge at ATM என்ற புதிய சேவை

Recharge at ATM என்ற புதிய சேவை

அன்மையில் ஜியோ நிறுவனம் Recharge at ATM என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது, இது ஏடிஎம் இயந்திரம் மூலம் ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழிமுறை ஆகும். இந்த புதிய வழிமுறையில் உள்ள ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால், இதை நிகழ்த்த ஒடிபி எதுவும் தேவைப்படாது.

வங்கிகளின் ஏடிஎம்களின் வழியாக ஜியோ ரீசார்ஜ்

வங்கிகளின் ஏடிஎம்களின் வழியாக ஜியோ ரீசார்ஜ்

அதன்படி AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India போன்ற வங்கிகளின் ஏடிஎம்களின் வழியாக ஜியோ ரீசார்ஜ் நிகழ்த்த அனுமதி கிடைக்கும்.

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம்

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம்

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம், ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.249 திட்டம் குறித்து பார்க்கையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி என்ற வீதம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ஜியோ அல்லாத பிற நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருநாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களை வழங்கப்படுகிறது.

ரூ.444 திட்டம் குறித்து பார்க்கலாம்

ரூ.444 திட்டம் குறித்து பார்க்கலாம்

அதேபோல் ரூ.444 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் 56 நாட்களுக்கு 112 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 2000 நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத அழைப்புயும் வேலிடிட்டி செல்லுபடியாகும் நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.599-க்கு வழங்கப்படும் திட்டம்

ரூ.599-க்கு வழங்கப்படும் திட்டம்

மேலும் ரூ.599-க்கு வழங்கப்படும் திட்டத்தில் 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத பிற நிறுவன அழைப்பிற்கு 3000 நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. முக்கியமாக இதில் சந்தாதாரர்களுக்கு வீட்டில் இருந்தே பொழுதை போக்க சிறந்த அம்சமாக இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டமானது 51 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் மொத்தம் 102 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது. அதாவது ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அடிப்படையிலான திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

சில்லரை விலையில் பல்வேறு சலுகைகள்

சில்லரை விலையில் பல்வேறு சலுகைகள்

அடிப்படை திட்டங்களாக சில்லரை விலையில் பல்வேறு சலுகைகள் அறிமுகம் செய்துள்ளது. அது ரூ.11-ல் இருந்து தொடங்குகிறது, ரூ.11-க்கு கிடைக்கும் திட்டமானது 800 எம்பி டேட்டா ஆனது 75 நிமிட குரல் அழைப்புகளும் வழங்குகிறது. அதோடு ரூ.21-க்கு வழங்கும் திட்டமானது 2 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது. அதோடு ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 200 நிமிட குரல் அழைப்புகளையும் வழங்குகிறது.

மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்!மஜா அறிவிப்பு: 90 நாள் வேலிடிட்டியோடு Vodafone அறிமுகம் செய்த ரூ.47, ரூ.67, ரூ.78 திட்டங்கள்!

ரூ.101-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.101-க்கு கிடைக்கும் திட்டம்

மேலும் ரூ.101-க்கு கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கையில் 12 ஜிபி டேட்டா வழங்குவதோடு 1000 நிமிட ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Best jio recharge plans: daily based data, non jio calling, sms

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X