ரூ.200-க்குள் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இந்த 5 Jio பிளானை பாருங்க!
குறைந்த காசுக்கு, அதிக பலன் கிடைக்கும் விஷயங்களை தான் மக்கள் எப்போதுமே வாங்க விருப்பம் காட்டுகிறார்கள். ரீசார்ஜ் திட்டங்களும் அப்படியானவை தான்.. உங்கள் போனிற்கு தேவையான டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை குறைந்த விலையில் வாங்க ஆசையா? இதை படியுங்கள்.
இப்படி குறைந்த விலையில் மகத்தான நன்மைகளை பெற உங்களுக்கும் ஆசையா? அப்படியானால், நீங்கள் கட்டாயம் ஜியோவின் இந்த 5 சூப்பர் மணி சேவிங் ரீசார்ஜ் திட்டங்களை பார்க்க வேண்டும். இந்த 5 ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் அணைத்தும் ரூ.200 விலைக்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டங்கள் உங்களுக்கு தேவையான தினசரி டேட்டாவுடன், SMS மற்றும் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு வகையான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதன் பயனர்களின் பல்வேறு விதமான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜியோவிடம் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. வருடாந்திர திட்டங்கள் முதல் மாதாந்திர மற்றும் குறுகிய டேட்டா டாப்-அப்கள் வரை, ஜியோ அனைவருக்கும் உகந்த திட்டங்களை தனது பட்டியலில் வைத்துள்ளது.
அந்த வரிசையில் நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக ரூ. 200 விலைக்குள் கிடைக்கும் லோ-பட்ஜெட் ரீசார்ஜ் திட்டங்களை தனது பட்டியலில் வைத்துள்ளது. ரூ.200 விலைக்குள் உங்களுக்கு கிடைக்கும் பெஸ்டான ரீசார்ஜ் திட்டங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த திட்டங்களின் கீழ், ஜியோ என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

உங்களின் அடுத்த மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜுக்கு நேரம் நெருங்கிவிட்டது என்றால், கட்டாயம், ஒரு முறை இந்த ரீசார்ஜ் திட்டங்களை பார்வையிடுங்கள். ரூ.200 விலைக்கு கீழ் உள்ள சிறந்த ஜியோ திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம். Jio நிறுவனம் ரூ.119, ரூ.149, ரூ.179, ரூ.199, ரூ.209 ஆகிய திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 119 திட்டம்: இந்த திட்டமானது 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன், வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, 300 எஸ்எம்எஸ் மற்றும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 149 திட்டம்: இந்த திட்டம் உங்களுக்கு 20 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் நிறுவனம் வழங்குகிறது.

ஜியோ ரூ 179 திட்டம்: இந்த பேக்கில் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிவற்றை ஜியோ நிறுவனம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் இலவசமாக கிடைக்கிறது.
ஜியோ ரூ 199 திட்டம்: இந்த திட்டம் மொத்தம் 23 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிவற்றை வெறும் ரூ.199 விலைக்குள் வழங்குகிறது, இது தவிர ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
ஜியோ ரூ 209 திட்டம்: நமது பட்டியலில் இறுதியாக இருக்கும் இந்த ஜியோ திட்டம் அதன் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நண்மை ஆகியவற்றை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ ஆப் பலன்களை இலவசமாக வழங்குகிறது.
மலிவு விலையில் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மையை விரும்புவோருக்கு இந்த திட்டங்கள் மிகவும் சிறப்பானது.


Click it and Unblock the Notifications








