Home
News

2025 புத்தாண்டு ரீசார்ஜ்.. தினமும் 2ஜிபி டேட்டா.. 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் Jio திட்டங்கள்.. என்ன விலை?

ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஜியோ (Jio) தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2025-ல் ஜியோ நிறுவனம் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் மற்றும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2025 புத்தாண்டு:  56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் Jio திட்டங்கள்..

ஜியோவின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbpsஆக குறைக்கப்படும்

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோவின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோவின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஒருவேளை ஒடிடி நன்மை மற்றும் அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதாவது இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்போது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

2025 புத்தாண்டு:  56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் Jio திட்டங்கள்..

ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud போன்ற சலுகைகளை ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Jio Prepaid Plans with 56 Days Validity in 2025 : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X