2025 புத்தாண்டு ரீசார்ஜ்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..
ஏர்டெல்(Airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ (Jio) நிறுவனம். எனவே தான் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.500 க்குள் அதிக சலுகைகள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.499 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாகத் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட்' திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 448 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
இதுதவிர ரூ 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி SonyLiv, Zee5, JioCinema Premium, Lionsgate Play, Discovery Plus, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV மற்றும் JioCloud போன்ற பல OTT தளங்களுக்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும்
என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த ஜியோ திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் மேலும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications








