Jio சிம் யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா.. 90 நாட்களுக்கு OTT.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (jio) நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் பலர் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்நிறுவனம் ரூ.500க்குள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த ஜியோ திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த ஜியோ திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JIOHOTSTAR), தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தான் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோ டிவி (JioTV) ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 449 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே இந்த ஜியோ திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data), ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications