Home
News

ஒரு தடவை ரீசார்ஜ் செய்தால் போதும்.. 365 நாள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 2 Jio திட்டங்கள்..

ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (VI), பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ (jio) நிறுவனம். குறிப்பாக ஜியோ பயனர்கள் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் திட்டத்தைத் தேர்வு செய்வதை விட மூன்று மாதம் அல்லது ஒரு வருடம் வேலிடிட்டி தரும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அப்படி ஒரு வருடம் அல்லது மூன்று மாதம் வேலிடிட்டி வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் ரூ.3599 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 365 நாள் வேலிடிட்டி! அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 2 Jio திட்டங்கள்..

ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டே கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எஸ்எம் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

அதன்படி ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 999 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே இந்த தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ.

 365 நாள் வேலிடிட்டி! அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 2 Jio திட்டங்கள்..

மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.3599 மற்றும் ரூ.999 திட்டங்களைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Jio Prepaid plans that offer one year and three months validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X