அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!
ஜியோ பயனர்களுக்கு ஏராளமான பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கின்றன. இருப்பினும், ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகமாக ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களைத் தான் ரீசார்ஜ் செய்ய விருப்பப்படுகிறார்கள்.
இப்படி, நீங்களும் ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள Jio ரீசார்ஜ் திட்டங்களை முழுமையாகப் பாருங்கள்.

ரூ. 300 விலை வரம்பிற்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ பல விலை புள்ளியில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
இருப்பினும் நாம் இங்கு ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை பார்ப்பதனால், இங்கு இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 8 திட்டங்களை பட்டியலிட்டுள்ளோம்.
இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.149, ரூ. 179, ரூ. 199, ரூ. 209, ரூ. 239, ரூ. 249, ரூ. 259, ரூ. 299 போன்ற திட்டங்கள் உங்களுக்கு ரூ. 300 விலை வரம்பிற்குள் கிடைக்கிறது.
இந்த திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறீத்து என்று பார்க்கலாம்.

ஜியோ ரூ. 149 திட்டம்
இது வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் நீங்கள் இதை வாங்கினால் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கிறது.
இது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்த டேட்டாவாக 20ஜிபி பெறுகிறீர்கள். கூடுதல் நன்மைகளில் JioTV, Jio சினிமா மற்றும் பிற போன்ற Jio ஆப்ஸிற்கான இலவச சந்தா அடங்கும்.

ஜியோ ரூ. 179 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் பேக் வேலிடிட்டியுடன், இந்த ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

ஜியோ ரூ.199 மற்றும் ரூ. 209 திட்டம்
ஜியோ ரூ.199 திட்டம்
இந்த திட்டம் 23 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் போன்ற எக்ஸ்ட்ரா நன்மைகளும் கிடைக்கிறது.
ஜியோ ரூ. 209 திட்டம்
இது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற ஆப்ஸ் நன்மை கிடைக்கிறது.

ஜியோ ரூ. 239 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் இந்த திட்டம் 28 நாட்கள் என்ற மாதாந்திர வேலிடிட்டியுடன் வருகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1.5 டேட்டாவை வழங்குகிறது. இது ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பல எக்ஸ்ட்ரா நன்மைகளை உள்ளடக்கியது.

ஜியோ ரூ. 249 திட்டம்
இந்த திட்டம் 23 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.
இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு ஜியோவின் கூடுதல் இலவச ஆப்ஸ் நன்மைகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ. 259 திட்டம்
இந்த திட்டம் காலண்டர் மாத செல்லுபடியாகும் 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகியவை அடங்கும்.

ஜியோ ரூ. 299 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 56 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ஜியோ ஆப்ஸ் இலவச எக்ஸ்ட்ரா நன்மைகளுடன் வருகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் ரூ. 300 விலைக்குள் வருகிறது. உங்களுக்கும் பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால், இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications