Home
News

Jio, Airtel, மற்றும் Vodafone Idea-வில் ரூ. 200க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்..

Jio, Airtel, மற்றும் Vodafone Idea (Vi) ஆகிய நிறுவனங்களின் பட்டியலின் கீழ் வெறும் ரூ.200 விலைக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் பேக் திட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதில் எந்த திட்டம் உங்கள் பட்ஜெட்டுக்குள் சிறந்ததாக இருக்கிறது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ ரூ. 149 திட்டம்
ஜியோவின் கீழ் கிடைக்கும் முதல் திட்டம் ரூ. 149 திட்டமாகும், இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தாவை 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. தினமும் கிடைக்கும் 1 ஜிபி டேட்டா முடிந்த பிறகு, உங்களின் டேட்டா வேகம் 64Kbps ஆகக் குறைக்கப்படும்.

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோ ரூ.199 திட்டம்

ரூ.200 விலையின் கீழ் கிடைக்கும் அடுத்த திட்டம் ரூ.199 திட்டமாகும். இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தாவை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் ரூ.149 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.149 திட்டமானது உங்களுக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா, விங்க் மியூசிக் இலவச அணுகல் மற்றும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனை சந்தா போன்ற பிற நன்மைகளுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் இத்திட்டம் வருகிறது.

ஏர்டெல் ரூ.179 திட்டம்

ஏர்டெல் ரூ.179 திட்டம்
இத்திட்டம் உங்களுக்கு 2 ஜிபி டேட்டா நன்மை, 300 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடுதல் இலவச நன்மைகளாக ஹலோ ட்யூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் சந்தா, விங்க் மியூசிக் இலவச அணுகல், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனை சந்தா மற்றும் ரூ. 2 லட்சம் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீடு போன்றவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.199 திட்டம்

ஏர்டெல் ரூ.199 திட்டம்
இத்திட்டம் உங்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் நன்மைகளாக இலவச ஹலோ ட்யூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் சந்தா, விங்க் மியூசிக் இலவச அணுகல் மற்றும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான 30 நாள் இலவச சோதனை சந்தா ஆகியவற்றை 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலையின் கீழ் கிடைக்கும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்

Vi ரூ.148 திட்டம்
இத்திட்டம் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 18 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இதுவரை வரை பார்த்த ப்ரீபெய்ட் திட்டங்களிலேயே மிகவும் விலை குறைவான திட்டம் இந்த திட்டம் மட்டும் தான். விலைக்கு ஏற்றார் போல் இந்த திட்டத்தில் எந்த கூடுதல் இலவச நன்மையும் உங்களுக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Vi ரூ.149 திட்டம்

Vi ரூ.149 திட்டம்
இத்திட்டம் உங்களுக்கு 3 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக Vi மூவிஸ் மற்றும் டிவி பேசிக் அணுகல் ஆகியவை கிடைக்கிறது. பயன்பாடு அல்லது வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் இந்த திட்டத்துடன் உங்களுக்கு 1 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

Vi ரூ.199 திட்டம்

Vi ரூ.199 திட்டம்
இத்திட்டம் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மை ஆகியவற்றை 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் Vi மூவிஸ் மற்றும் டிவி அடிப்படை அணுகலை Vi உங்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Best Jio, Airtel, and Vodafone Idea Prepaid Packs Under Rs. 200 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X