Home
News

மாஸ் காட்டும் Jio.. ரூ.300 விலை புள்ளியில் 84 நாள் வேலிடிட்டி.. இலவச 5G டேட்டா.. இன்னும் ஏராளம்.. எந்த திட்டம்

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டில் ஒரு சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனம் இப்போது வழங்கி வருகிறது. இது உண்மையில் ஒரு சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளின் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை நாடு முழுவதும் அதன் 5ஜி சேவைகளை தீவிரமாக அறிமுகப்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் டேட்டா இணைப்பை வழங்க நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதேபோல், இந்தியாவில் Vi மிக விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டும் Jio.. ரூ.300 விலை புள்ளியில் 84 நாள் வேலிடிட்டி..

ஜியோவின் ரூ. 395 திட்டம்: இதற்கிடையில், 5ஜி சேவையுடன் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் திட்டங்களை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இதில் அதிக பயனர் சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக திகழ்வது ரூ.395 திட்டமாகும். இந்த ஜியோவின் ரூ. 395 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. இது ஏன் சிறந்த திட்டமாக திகழ்கிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாமா?

ஜியோ நிறுவனம் பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து இந்த ரூ. 395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டமானது அதன் விலைக்கு ஏற்ற பல சிறப்பு நன்மைகளை அடக்கியுள்ளது. இந்த திட்டம் வழக்கமான தினசரி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் போன்றதல்ல. இது உங்களு மொத்த டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது.

எத்தனை ஜிபி டேட்டா? இந்த ஜியோவின் ரூ. 395 திட்டமானது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த 6ஜிபி டேட்டா நன்மையை பயனர்கள் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் அவர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டேட்டா நன்மை, இந்த திட்டத்தின் 84 நாள் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகும். அதற்குள் எப்படி வேண்டுமானாலும் இந்த 6ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாஸ் காட்டும் Jio.. ரூ.300 விலை புள்ளியில் 84 நாள் வேலிடிட்டி..

இந்த திட்டம் ஜியோவின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த ரூ.395 திட்டத்துடன் ஜியோ வழங்கும் இலவச நன்மைகளும் கிடைக்கிறது. இந்த ரூ. 395 திட்டத்துடன் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற ஜியோவின் பிரத்தியேகமான சேவைக்கான அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது.

அதேபோல், ஜியோ 5ஜி கிடைக்கும் வட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யப்பட்ட நபர்களுக்கு இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. ஜியோ நிறுவனம் அதன் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G) திட்டத்தின் கீழ் இந்த இலவச டேட்டா நன்மையை 5ஜி வட்டங்களில் வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி இணக்கம் இருந்தால், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்துடன் கிடைக்கும் 6ஜிபி டேட்டா நிறைவடைந்த பிறகு டேட்டா வேகம் 65kbps ஆக குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச ஜியோ சினிமா சந்தையில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா உள்ளடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Jio 84 Days Validity Recharge Plan Rs 395 Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X