Home
News

தம்பி.. வேணாம்.. போயிடு.. iPhone 15-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்? 4 ஆப்ஷன்ஸ் இருக்கு!

சந்தேகத்திற்கு இடமின்றி, ஆப்பிளின் புத்தம் புதிய ஐபோன் 15 (iPhone 15) அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் பல்வேறு வகையான விருப்பங்கள் மற்றும் ஒவ்வொவரின் தனிப்பட்ட பட்ஜெட்களை கருத்தில் கொள்ளும்போது தான் "ஆல்டர்நேட்டிவ்" (Alternative) என்கிற வார்த்தை உள்ளே நுழைகிறது!

அதாவது "இதற்கு பதிலாக.. இதற்கு ஈடாக.. வேறு எதை வாங்கலாம்? என்கிற கேள்வி பிறக்கும். அப்படியாக ஐபோன் 15-க்கு பதிலாக வேறு என்ன ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற தேடலில் நீங்கள் இருந்தால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துளீர்கள். ஐபோன் 15-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம் என்கிற பட்டியல் இதோ:

iPhone 15-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்?

01. ஐபோன் 14 (iPhone 14): இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஓராண்டு பழைய மாடலான ஐபோன் 14 உள்ளது. உங்களுக்கு சற்று இறுக்கமான பட்ஜெட் இருந்தால், நீங்கள் ஐபோன் 15-க்கு பதிலாக ஐபோன் 14-ஐ தேர்வு செய்யலாம். கண்டிப்பாக ஐபோன் 15ல் உள்ள சில அம்சங்கள் ஐபோன் 14ல் இல்லை தான்.

இருப்பினும் ஐபோன் 14-ஐ தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், அற்புதமான டிஸ்பிளே, அடுத்த பல ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் சப்போர்ட், அற்புதமான கேமரா செட்டப்பை பெறலாம். புதிய கலர் ஆப்ஷன்கள் இல்லை என்றாலும் கூட, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 ஆகிய இரண்டுமே பின்புறத்திலிருந்து பார்க்க ஒரே மாதிரியாக இருக்கின்றன.

02. சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23): கேலக்ஸி எஸ்23 மாடலன் சாம்சங் என்கிற பிராண்டின் தொழில்நுட்ப வலிமையின் ஒட்டுமொத்த சுருக்கமாகும். இது 120ஹேர்ஸ்ட ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. எந்த போனிலும் இந்த அளவிலான சிறந்த மற்றும் பிரகாசமான பேனல் இல்லை என்றே கூறலாம்.

கூடவே இது அட்டகாசமான கேமிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், அற்புதமான அவுட்புட்க்களை வழங்கும் 50எம்பி மெயின் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆண்ட்ராய்டு உலகின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்பை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், சாம்சங் கேலக்ஸி எஸ்23-ஐ தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம்!

03. கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro): சக்திவாய்ந்த டென்சர் ஜி2 எஸ்ஓசி மற்றும் ஈர்க்கக்கூடிய 64எம்பி மெயின் கேமரா, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே என ஐபோன் 15-க்கு எந்த வகையிலுமே குறை இல்லாத ஒரு ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால்.. கூகுள் பிக்சல் 8 ப்ரோவை விட சிறந்த ஆப்ஷன் கிடைக்காது!

04. ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G): இந்த பட்டியலில் கடைசியாக ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. தனது போட்டியாளர்களை கலங்கடிக்கும் விலையில் உயர்தர ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் கில்லாடியான ஒன்பிளஸ் நிறுவனமும் கூட ஆப்பிளின் முக்கிய எதிரிகளில் ஒன்றாகும்.

'பிராண்டிங்' தான் முக்கியம் என்கிற எண்ணம் கொண்ட பல ஆப்பிள் விசுவாசிகளை தன்வசம் ஈர்த்த பெருமை ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு சேரும். அதிலும் குறிப்பாக ஒன்பிளஸ் 11 ஸ்மாட்போனிற்கு கிடைத்த வரவேற்பு.. இன்னும் ஓயவில்லை என்றே கூறலாம். ஆக இதையும் ஐபோன் 15-க்கான பெஸ்ட் ஆல்டர்நேட்டிவ் ஆக எடுத்து கொள்ளலாம்.

இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி வரையிலான ரேம், ஹசல்பிளாட் கேமரா செட்டப், 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 5000mAh பேட்டரி என.. இந்தியாவில் நீங்கள் இப்போது வாங்கக்கூடிய மிகவும் மலிவான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best iPhone 15 Alternative Phones in India OnePlus 11 Google Pixel 8 Pro Samsung Galaxy S23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X