ரூ.30,000-க்குள் இதுக்கு மேல தரமான Gaming Phones.. கடல்லயே இல்லயாம்!
சமூகவலைதள பயன்பாடு, யூடியூப் வீடியோ, ஓடிடி ஸ்ட்ரீமிங் என பல அம்சங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தாலும் கேமிங் என்றால் ஒரு மதிப்பு இருக்கத் தான் செய்யும். பல்வேறு வகையான கேம்கள் துல்லியமான கிராஃபிக்ஸ் டிசைன் உடன் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. மொபைலில் கேமிங் அனுபவத்தை முழுமையாக பெறுவதற்கு ரூ.30,000 இருந்தாலே போதும்.

ரூ.30,000 விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள்
2022 ஆம் ஆண்டில் ரூ.30,000 விலைப் பிரிவில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. இதில் சிறந்த இன் கிளாஸ் வேகமான சார்ஜிங் ஸ்மார்ட்போன், மலிவு விலையில் முதன்மை தர அனுபவம் உள்ளிட்ட சாதனங்கள் அடங்கும். ரூ.30,000 விலைப் பிரிவில் சிறந்த செயல்திறன் உடன் மொபைல் கேமிங் சாதனங்களை தேடுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஐக்யூ நியோ 6
ஐக்யூ நியோ 6 சாதனமானது நியோ தொடரின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் 4700 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கேமிங் அனுபவத்தை முழுமையாக வழங்கும் சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Xiaomi 11i ஹைப்பர் சார்ஜ்
சியோமி 11ஐ ஆனது இந்தியாவில் வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. முழுமையான கேமிங் அனுபவத்தை வழங்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி சிப்செட் இதில் இருக்கிறது.

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டிருக்கிறது. முன்புறத்தின் மேல் மையத்தில் துளை பஞ்ச் கட்அவுட் வசதி இருக்கிறது. இந்த சாதனத்தில் 108 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது.
இந்தியாவில் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் சாதனத்தின் விலை ரூ.26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Poco F3 GT
Poco F3 GT ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி வசதியை கொண்டிருக்கிறது. அதோடு பிரத்யேகமாக கேமிங் அணுகலுக்கு என தனிப்பயனாக்கக்கூடிய சாதனத்தில் ஷோல்டர் பட்டன் இருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு ஆதரவுடன் 6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 5060 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

Poco F3 GT பின்புறத்தில் 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 16 எம்பி முன்புற கேமரா வசதி இருக்கிறது. இந்தியாவில் போக்கோ எஃப்3 ஜிடி சாதனத்தின் விலை ரூ.28,999 ஆக இருக்கிறது.

Oppo Reno 7 5G
Oppo Reno 7 5G ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 6.4 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் துல்லியமான கேமிங் காட்சியை பெற 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.
64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi Mi 11X
Xiaomi Mi 11X Pro ஸ்மார்ட்போனானது அமேசான் இந்தியா தளத்தில் ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. உயர்தர கேமிங் ஆதரவை வழங்கும் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியுடன் 108 எம்பி டிரிபிள் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. Mi 11X Pro 33வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4520 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டிருக்கிறது.

எம்ஐ 11எக்ஸ் ஸ்மார்ட்போனும் கேமிம் ஆர்வலர்களுக்கான சிறந்த சாதனமாகும். காரணம் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 48 எம்பி பிரதான கேமராவை தவிர பிற அம்சங்கள் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ போன்றே இருக்கிறது.

Poco F4 5G
போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனானது ஜூன் 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி டிரிபிள் கேமரா உடன் கேமிங் ஆதரவுக்கு என ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தில் 6.67 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications