அள்ளிப்போடுங்க.. 40 மணிநேர பேட்டரி லைஃப்.. ANC சப்போர்ட்.. இதுக்கு மேல கம்மியா இனி கிடைக்காது.. என்ன மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஒரு நல்ல TWS இயர்பட்ஸை வாங்க வேண்டுமென்கிற தேடலில் நீங்கள் இருந்தால்.. குறிப்பாக உங்களுடைய பட்ஜெட் ரூ.5000 க்குள் என்றால்.. கவலையை விடுங்கள்.. ஒன்றல்ல, இரண்டல்ல.. உங்களுக்கு மொத்தம் 6 ஆப்ஷன்கள் உள்ளன!
கடந்த அக்.7 முதல் ப்ரைம் மெம்பர்களுக்கும், அக்.8 முதல் மற்ற அனைத்து பயனர்களுக்கும் தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ரூ.5000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 6 பெஸ்ட் ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்களின் (Best TWS Earbuds Under Rs.5000) பட்டியல் இதோ:

01. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ (Realme Buds Air 5 Pro): கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது இது ரூ.4,699 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக பேங்க் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்படுத்தினால் இதன் விலையை இன்னும் குறைக்கலாம். 360 டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்டுடன் 50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை வழங்கும் இந்த இயர்படஸ் 40 மணிநேர பேட்டரி லைஃப் உடன் வருகிறது.
02. ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்2 (OnePlus Buds Z2): 11மிமீ டைனமிக் டிரைவர்ஸ், 40dB வரை நாய்ஸ் கேன்சலேஷன், 38 மணிநேர பிளேபேக் டைம் உடன் வரும் இந்த இயர்பட்ஸ் அமேசான் விற்பனையின் போது ரூ.3,999க்கு வாங்க கிடைக்கும். அதாவது இதன் விலை 33% குறைக்கப்பட்டுள்ளது, நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.5,999 ஆகும். கூடுதலாக பேங்க் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்படுத்தினால் இதன் விலையை இன்னும் குறைக்கலாம்.
03. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் (Samsung Galaxy Buds Live): ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation -ANC), 21 மணிநேர மொத்த பேட்டரி லைஃப், 12 மிமீ ஸ்பீக்கர்ஸ், தனித்துவமான டிசைன் உடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.3,999 க்கு வாங்க கிடைக்கும். இது மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் ப்ரோன்ஸ் கலர்களில் கிடைக்கின்றன.
04. ரியல்மி பட்ஸ் ஏர் 3 (Realme Buds Air 3): 42dB வரையிலான ஆக்டிவ் நைஸ் கேன்சலேஷன், 10 மிமீ டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்ஸ், 30 மணிநேரம் வரை மொத்த பேட்டரி லைஃப் (30Hrs Total Battery Life) உடன் வரும் இந்த இயர்பட்ஸ், நடந்து கொண்டு இருக்கும் அமேசான் விற்பனையின் போது, அதன் வழக்கமான விலையான ரூ.5999 இல் இருந்து 33% குறைந்து ரூ.3,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ஜேபிஎல் ட்யூன் 230என்சி (JBL Tune 230NC): ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 40 மணிநேரம் வரை மொத்த பிளேபேக் நேரம் போன்ற அம்சங்கள், கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த இயர்பட்ஸ் அமேசானில் தற்போது ரூ.3,988 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.7,999 ஆகும். அதாவது இது 50 சதவீதம் தள்ளுபடியை பெற்றுள்ளது.
06. ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ (Oppo Enco Air 2 Pro): 12.4 மிமீ டைட்டானியம் கோடட் டயாஃப்ரம் டிரைவர்ஸ் (titanium coated diaphragm drivers), ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 28 மணிநேர மொத்த பேட்டரி லைஃப் உடன் வரும் இந்த இயர்பட்ஸ், அமேசானில் தற்போது ரூ.3,498 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்படுத்தினால் இதன் விலையை இன்னும் குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications








