Home
News

மலிவான விலைக்கு கிடைக்கும் 90 நாள் திட்டங்கள்: Jio VS Airtel VS BSNL.. யார் வின்னர்?

பெரும்பாலான மொபைல் பயனர்கள் ஒடிபி-க்கள், வங்கி அல்லது பேக்கப் பயன்பாட்டிற்கு மட்டுமே இரண்டாம் நிலை சிம் கார்ட்டை வைத்திருக்கிறார்கள். ஆக செக்கென்ட சிம் கார்டுக்கான முக்கிய தேவை - மிகவும் எளிமையானது: ஒரு மொபைல் நம்பரை மிக குறைந்த செலவில் ஆக்டிவ் ஆக வைத்திருக்க வேண்டும்; அவ்வளவு தான்!

டெலிகாம் நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட "தேவைக்காக" வெவ்வேறு வகையான லாங் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. சில திட்டங்கள் வாய்ஸ் காலிங்கில் கவனம் செலுத்துகின்றன, மற்றவை டேட்டா பேக்குகளாக அணுக கிடைக்கிறது. ஒருவேளை உங்கள் சிம் கார்ட்டை "அலைவ்" (Alive) ஆக வைத்திருக்க மிகவும் மலிவான "90 நாள் ரீசார்ஜ்" திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களென்றால் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய ஆபரேட்டர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய திட்டங்களின் எளிய ஒப்பீடு - இதோ:

மலிவான விலை 90 நாள் திட்டங்கள்: Jio VS Airtel VS BSNL.. யார் வின்னர்?

பிஎஸ்என்எல் (BSNL): இந்நிறுவனம் 90 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், இலவச நேஷனல் ரோமிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், எந்த டெய்லி லிமிட்டும் இல்லாத 5ஜிபி அளவிலான மொத்த டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்

இந்த திட்டத்தின் பயனுள்ள செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 ஆகும். மிகவும் குறைந்த தினசரி செலவில் வாய்ஸ் காலிங் நன்மைகளுடன் சேர்த்து நீண்ட கால செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் பல வட்டங்களில் அதன் 4ஜி உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்தி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் (Airtel): ஏர்டெல்லின் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள், முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தம் 900 இலவச எஸ்எம்எஸ்கள், எந்த டெய்லி லிமிட்டும் இல்லாத 7ஜிபி அளவிலான மொத்த டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் ரூ.548-ன் கீழ் 12 மாத காலத்திற்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா இலவசமாக கிடக்கம் மற்றும் ஏர்டெல்லின் ஸ்பேம் எச்சரிக்கை அம்சமும் அணுக கிடைக்கும். வேறு சில ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டத்தின் தினசரி செலவு கொஞ்சம் அதிகமாக உள்ளது, ஆனால் இதில் கூடுதல் டிஜிட்டல் சலுகைகள் உள்ளதால், இதை கருத்தில் கொள்ளலாம்.

ஜியோ (Jio): ஜியோவிடம் 90 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.195 டேட்டா பேக் உள்ளது. இந்த பேக் முழு காலத்திற்கும் 15 ஜிபி மொத்த அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இதில் வாய்ஸ் காலிங் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை. வைஃபை டாங்கிள்கள் அல்லது இரண்டாம் நிலை போன்கள் போன்ற டிவைஸ்களுக்கு மட்டுமே டேட்டா தேவைப்படும் பயனர்கள் இந்த திட்டத்தை பரிசீலிக்கலாம். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய மெயின் ரீசார்ஜும் தேவைப்படும்.

முடிவு: குறைந்தபட்ச தினசரி கட்டணத்தில் வாய்ஸ் காலிங் ஆதரவுடன் நீண்ட காலம் செல்லுபடியாகும் தன்மை மட்டுமே உங்களுடைய இலக்கு என்றால், தற்போது பட்டியலிடப்பட்டுள்ள விருப்பங்களில் ரூ.449 பிஎஸ்என்எல் திட்டம் - ஒரு நாளைக்கு மிக குறைந்த செலவை வழங்குகிறது. இருப்பினும், ஓடிடி அல்லது டிஜிட்டல் சந்தாக்கள் போன்ற கூடுதல் அம்சங்கள் முக்கியமானதாக இருந்தால், ஏர்டெல்லின் ரூ.548 திட்டம் சரியானதாக இருக்கும். டேட்டா-ஒன்லி தேவைகளுக்கு, ஜியோவின் ரூ.195 பேக் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் விருப்பமாகும். ஒட்டுமொத்தமாக - பெஸ்ட் ஆப்ஷன் என்பது வெறுமனே பிராண்ட் விருப்பத்தை பொறுத்து அல்ல, பயன்பாட்டுத் தேவைகளைப் பொறுத்தது.

Best Mobiles in India

English summary
Best Cheapest 90 Day Recharge Plan Airtel Vs Jio Vs BSNL Who Will Win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X