Home
News

சிறந்த கேமரா கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000

ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் வாங்குவதில் பெரும்பாலானோரும் அதிக துள்ளியமான கேமரா கொண்டிருக்கும் மாடல்களையே பரிந்துரைக்கின்றனர்.

இதை நன்கு அறிந்திருக்கும் ஹூவாய் போன்ற பல பிரபல நிறுவனங்களும் தரமுள்ள கேமராவை வழங்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இங்கு ரூ.10,000 பட்ஜெட்டில் சிறந்த கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

ஹானர் 4சி

ஹானர் 4சி

ஹூவாய் ஹானர் 4சி ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா 4280*3120 பிக்சல் துள்ளியமான புகைப்படங்களை படமாக்குவதோடு ஆட்டோ-ஃபோகஸ், டச் ஃபோகஸ், போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருப்பதோடு 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 620 பிராசஸருடன் இதன் விலை ரூ.8,999.

ஹானர் 4எக்ஸ்

ஹானர் 4எக்ஸ்

சக்திவாய்ந்த ஹானர் 4எக்ஸ் 13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோ-ஃபோகஸ், டச் ஃபோகஸ், ஃபேஸ் டிடக்ஷன் போன்ற அம்சங்களும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. இதோடு 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருக்கும் இதன் விலை ரூ.9,999.

ஹானர் பீ

ஹானர் பீ

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோ-ஃபோகஸ், டூயல் எல்ஈடி ப்ளாஷ், ஃபேஸ் டிடக்ஷன் அம்சங்களும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. மேலும் 4.5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே குவாட்கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதோடு ரூ.4,499க்கு கிடைக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ311

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ311

கேன்வாஸ் நைட்ரோ ஏ311, 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக் கேமராவும் கொண்டிருக்கின்றது. சிமோஸ் இமேஜ் சென்சார் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் கொண்டிருப்பதோடு ரூ.8,999க்கு கிடைக்கின்றது.

ரெட்மி 2

ரெட்மி 2

இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி ப்ரைமரி கேமரா, பிஎஸ்ஐ சென்சார் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. இதோடு 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருப்பதோடு ரூ.6,999க்கு கிடைக்கின்றது.

மோட்டோ ஈ ஜென் 2

மோட்டோ ஈ ஜென் 2

விலை குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மோட்டோ ஈ ஜென் 2 ஸ்மார்ட்போனில் 5 எம்பி ப்ரைமரி கேமராவும், விஜிஏ முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 4.5 க்யுஎச்டி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் கொண்டிருப்பதோடு ரூ.6,999க்கு கிடைக்கின்றது.

ஏசஸ் சென்ஃபோன் 2

ஏசஸ் சென்ஃபோன் 2

இந்த ஏசஸ் கருவி 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இன்டெல் ஆடம் பிராசஸர் கொண்டிருப்பதோடு ரூ.9,999க்கு கிடைக்கின்றது.

கார்பன் டைட்டானியம் பி9

கார்பன் டைட்டானியம் பி9

8 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா கொண்டிருக்கின்றது டைட்டானியம் பி9. இதோடு ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் வசதியும் ஆட்டோ ஃபோகஸ், பானரோமா போன்ற அம்சங்கள் இருப்பதோடு 6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுவதோடு ரூ.8,999க்கு கிடைக்கின்றது.

கார்பன் மேக் டூ டைட்டானியம்

கார்பன் மேக் டூ டைட்டானியம்

இந்த ஸ்மார்ட்போனும் 8 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமராவை கொண்டிருப்பதோடு பிஎஸ்ஐ இமேஜ் சென்சார், எல்ஈடி ப்ளாஷ், எச்டிஆர் போன்ற அம்சங்களும் 6 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் கொண்டிருப்பதோடு ரூ.8,499க்கு கிடைக்கின்றது.

ஐபால் என்கிமா ஆன்டி 4.5எம்

ஐபால் என்கிமா ஆன்டி 4.5எம்

13 எம்பி ப்ரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் இந்த கருவியில் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 4.5 இன்ச் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999.

Best Mobiles in India

English summary
Here are the best smartphone that houses the stunning rear camera at a price tag of Rs. 10,000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X