Home
News

மார்க்கெட்ல கிடைக்கிற Best Camera Phone வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா.. ரூ.40000 குள்ள 4 ஆப்ஷன் இருக்கு!

ஐபோன் 15 அறிமுகமாகி விட்டது; ஒன்பிளஸ் 12 வருகிற ஜனவரி 24 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இவ்விரண்டுமே பெஸ்ட் கேமரா போன்களாகத்தான் இருக்கும். இருப்பினும் இவைகளின் விலை நிர்ணயம் ரூ.60,000 க்கு மேல் இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15) மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.65,000 க்குள் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.40000 க்குள் கிடைக்கும் 4 Best Camera Phone-கள்!

உங்களுடைய ஒட்டுமொத்த பட்ஜெட்டே ரூ.40,000 க்குள் தான் இருக்கிறது என்றால்.. அதற்குள் ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் (Best Camera Phone Under 40000) என்கிற தேடலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால்.. உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 4 பெஸ்ட் ஆப்ஷன்கள் உள்ளன:

01. கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a): பிளிப்கார்ட் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஓஐஎஸ் என்று சுருக்கமாக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 64எம்பி மெயின் கேமரா + 13Mஎம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ரூ.40000 க்குள் கிடைக்கும் 4 Best Camera Phone-கள்!

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1-இன்ச் HD+ OLED டிஸ்பிளே, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டென்சார் ஜி2 சிப்செட், 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.

02. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): பிக்சல் 7ஏ மாடலை போலவே இதுவும் ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட்ஃபீல்ட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ரூ.40000 க்குள் கிடைக்கும் 4 Best Camera Phone-கள்!

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் OLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ்13, 100வாட்ஸ் SuperVOOC S ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

03. விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro): மேற்கண்ட 2 மாடல்களை போலவே இதுவும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி போர்ட்ரெய்ட் கேமரா + 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ரூ.40000 க்குள் கிடைக்கும் 4 Best Camera Phone-கள்!

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே, 4600mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு உடனான ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட் போன்றவைகளை கொண்டுள்ளது.

04. நத்திங் போன் 2 (Nothing Phone 2): இந்த பட்டியலில் கடைசியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனும் கூட ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 50எம்பி + 50எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதிலுள்ள மெயின் கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (ஓஐஎஸ்) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (இஐஎஸ்) ஆகிய இரண்டிற்குமான ஆதரவையும் வழங்குகிறது.முன்பக்கத்தில் 32எம்பி கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Camera Phone Under 40000 December 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X