ரூ.10,000 விலைக்குள் இத்தனை பெஸ்ட் கேமரா Mobile-ஆ! ஒவ்வொன்றும் தங்கமா இருக்கு!
மலிவு விலை போன்களில் பெஸ்ட் கேமரா போன் எது? என்று யோசித்தால், சில மாடல்கள் மட்டுமே நம் கண் முன்னே வந்து செல்கிறது. ரூ.10,000 விலைக்குள் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் கேமரா மொபைல் போன் (Mobile) எது என்று பார்க்கலாம் வாங்க.
மலிவு விலையில் புது போன் வாங்க வேண்டும் என்றாலே, எல்லோரின் நினைவிற்கு முதலில் வரும் பிராண்ட் சியோமி (Xiaomi) தான். அப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து ரூ.10,000 விலை பட்டியலுக்குள் கிடைக்கும் சாதனம் தான் சியோமி ரெட்மி 10 (Xiaomi Redmi 10) மாடலாகும். இது 6.5' இன்ச் IPS LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது.

இது 50MP + 8MP + 2MP பின்பக்க கேமரா மற்றும் 13MPமுன்பக்க கேமராவை கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இது 5000mah பேட்டரியை பேக் செய்கிறது. இதன் விலை ரூ. 9,499 மட்டுமே. இது பிளிப்கார்ட் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.
அடுத்தபடியாக இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் பிரபலமான சாம்சங் (Samsung) நிறுவனத்திடமிருந்து வருகிறது. இது சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) என்ற பெயரை கொண்டுள்ளது. இது 6.6' இன்ச் கொண்ட முழு HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 50MP கொண்ட ட்ரிபிள் கேமராவுடன் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 6000mAh பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.இதன் விலை ரூ. 9,699 ஆகும்.
அடுத்தபடியாக, பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் சாதனமாக ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) இருக்கிறது. இது 6.6' இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 50MP உடன் ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Flipkart தளத்தில் இந்த போன் ரூ. 8,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

இறுதியாக இந்த பட்டியலில் உள்ள பெஸ்ட் கேமரா போன் சாதனமாக நோக்கியா சி32 (Nokia C32) போன் வாங்க கிடைக்கிறது. Nokia C32 ஆனது 6.52' இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 50MP பின்புற கேமராவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 உடன் இயங்கும் சாதனமாகும். இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.9,499 ஆகும். இந்த சாதனம் நோக்கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தாளத்தில் வாங்க கிடைக்கிறது.
இந்த பட்டியலில் உள்ள அனைத்து ஸ்மார்ட் போன் மாடல்களும் பட்ஜெட் விலையில் வருகிறது. குறிப்பாக, ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடலில் பெஸ்ட் கேமராவை கொண்ட சாதனங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். மலிவு விலையில் கிடைக்கும் போன்களில், இந்த போன் மாடலில் தான் சிறந்த கேமரா அம்சம் இருக்கிறது. உங்கள் தேர்வு இந்த 4 போன்களில் இருந்து இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








