குழப்பமே வேணாம்: பட்ஜெட் விலையில் இதெல்லாம் சிறந்த ஸ்மார்ட்போன்- பார்த்து வச்சுக்கோங்க!

|

பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு இந்த தகவல் மிகவும் சிறந்ததாக இருக்கும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு என சிறந்த பட்டியலே இருக்கிறது. இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதிக புதுப்பிப்பு விகித காட்சிகள், உயர் தெளிவுத்திறன், கேமரா அமைப்புகள், நல்ல வடிவமைப்புகள் என பல்வேறு சாதனங்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.

பட்ஜெட் விலை சிறந்த அம்ச ஸ்மார்ட்போன்கள்

பட்ஜெட் விலை சிறந்த அம்ச ஸ்மார்ட்போன்கள்

2021 ஆம் ஆண்டில் இந்திய சந்தையை கவர்ந்த பட்ஜெட் விலை சிறந்த அம்சம் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாக்கெட் விலையிலேயே கிடைக்கும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்காலம். ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு 1080 x 2400 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 5 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா என நான்கு கேமராக்கள் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் எஸ்எம்7150 ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ கோர் வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு 1080 x 2400 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 எம்பி கேமரா என மூன்று கேமராக்கள் இருக்கிறது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயக்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,499 விலையிலும் அமேசான்.இன் தளத்தில் ரூ.18,260 என்ற விலையில் இருக்கிறது.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் வசதியோடு 1080 x 2340 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா என நான்கு கேமராக்கள் இருக்கிறது. 6 ஜிபி ரேம் வசதியோடும், 6000 எம்ஏஎச் பேட்டரியோடு, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ கோர் இயங்குதளத்தோடு வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999 விலையிலும், அமேசான் தளத்தில் ரூ.19,990 என இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 32

சாம்சங் கேலக்ஸி எம் 32

சாம்சங் கேலக்ஸி எம் 32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 64 எம்பி கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா என் நான்கு கேமராக்கள் இருக்கிறது. இது 4 ஜிபி ரேம் வசதியோடு 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ மூலம் இயக்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது.

File Image

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Budget Smartphones Available at Range of Rs.15,000: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X