Home
News

2025-ல் பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது? எது கம்மி காசில் மாஸான Smartphone.. இதோ லிஸ்ட்.. மிஸ் பண்ணாதீங்க..

இந்த 2025 இல் குறைந்த செலவில் ஒரு சூப்பரான அட்டகாசமான பணத்திற்கு ஏற்ற பெஸ்ட் ஸ்மார்ட்போன் (smartphone) மாடலை வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆனால், இந்த புதிய 2025 ஆம் ஆண்டில் எது சரியான பட்ஜெட் ஸ்மார்ட்போன் (budget smartphone) என்பதை அறிந்துகொள்வதில் சிக்கலாக இருக்கிறதா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான். கம்மி விலையில், நீங்கள் ஆசைப்படும் பட்ஜெட்டிற்குள் தற்போது வாங்க கிடைக்கும் ரீசென்ட் புது ஸ்மார்ட்போன் மாடல்களின் தொகுப்பு தான் இந்த பதிவு.

இந்த வருடத்தில் அதிகமாக மக்களால் விரும்பி வாங்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல், பட்ஜெட்டில் சிறந்த டிசைன், பட்ஜெட்டில் பெஸ்டான அம்சங்களை பேக் செய்த டோட்டல் பட்ஜெட் பிரெண்ட்லி ஸ்மார்ட்போன் (budget friendly mobile) மாடல்களை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பட்ஜெட் என்று கூறும் பொழுது, அடிப்படை மாடல்கள் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற சிறந்த மாடல்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

2025-ல் பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது? எது கம்மி காசில் மாஸான போன்..

1. லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G):
ரூ. 15,000 விலைக்குள் அருமையான ஒரு போனை வாங்க வேண்டுமென்று ஆசையா? அப்படியானால், உங்கள் விருப்பத்தில் Lava Blaze Duo 5G மாடலை வைப்பது சிறப்பானது. இந்த போனின் அசல் விலை ரூ. 20,499 ஆகும். இந்த போனின் மீது கிடைக்கும் ஒட்டுமொத்த சலுகையையும் பயன்படுத்தி, இந்த போனை அமேசான் தளத்தில் இருந்து இப்போது வெறும் ரூ. 14,999 விலையில் வாங்க வாய்ப்புள்ளது.

2. நத்திங் போன் 2a (Nothing Phone 2a):
ரூ. 20,000 பட்ஜெட்டிற்குள் ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து, புதுமையான டிஸைனுடன் ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் நபர் நீங்கள் என்றால், உங்கள் தேர்வில் இந்த Nothing Phone (2a) ஸ்மார்ட்போன் இருந்தால் சிறப்பானது. மற்ற தளங்களில் இந்த நத்திங் போன் 2a சாதனத்தின் விலை ரூ. 23,000-க்கு மேல் செல்கிறது. ஆனால், ஜியோ மார்ட் (Jio Mart) தளத்தில் மட்டும் இது ரூ. 20,000 விலையில் தற்போது வாங்க கிடைக்கிறது.

3. ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro):
பட்ஜெட் என்ற சொன்ன பிறகு அதில் ரெட்மி மாடல் இல்லாமலா இருக்கும். பட்ஜெட் என்றதுமே பெரும்பாலான மக்களின் மனதில் தோன்றும் ஒரு பிராண்ட் என்றால் அது Redmi தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ரெட்மியின் சமீபத்திய மாடலான Redmi Note 14 Pro வாங்க இது சரியான நேரம் மக்களே. இதன் அசல் விலை ரூ. 28,999 ஆகும். தற்போது Flipkart இதன் விலை ரூ.24,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

4. ஒன்பிளஸ் நார்ட் CE 4 (OnePlus Nord CE 4):
இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரின் கைகளிலும் தவழும் ஒரு பெஸ்ட் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த OnePlus Nord CE 4 தான். Amazon தளத்தில் இந்த போன் தற்போது ரூ. 21,999 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Budget Smartphone In 2025 To Buy Now From Amazon Flipkart Jio Mart Lava Redmi OnePlus Nothing Mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X