கம்மி விலையில் தினமும் 2GB டேட்டா வேண்டுமா? இந்த Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்களை பாருங்க.!
குறைந்த விலையில் உங்கள் பாக்கெட் பணத்திற்குப் பங்கம் வைக்காத பெஸ்டான ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களா? அதுவும் குறிப்பாக, மிகக் குறைந்த கட்டணத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவுக்கு குறையாமல் கிடைக்கும் பாக்கெட் பிரெண்ட்லி Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டத்தை எதிர்பார்க்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், இந்த பதிவு ஸ்பெஷல்லி உங்களுக்கானது தான். ரூ.249 முதல் ரூ.500 விலைக்குள் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

குறைந்த விலையில் தினமும் 2ஜிபி டேட்டா வேண்டுமா?
குறைந்த விலையில் அதிக டேட்டா என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தான். ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து இப்போது உங்களுக்கு இந்த விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்டான தினசரி 2ஜிபி ரீசார்ஜ் திட்டங்களைத் தான் இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். இத்துடன் இறுதியில் ஏர்டெல் மற்றும் Vi வழங்கும் திட்டங்களையும் சேர்த்துள்ளோம். இந்த திட்டங்கள் அனைத்தும், உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு நன்மையோடு OTT விருப்பத்தையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் மிகவும் மலிவான ரூ.249 திட்டம்
சரி, நமது பட்டியலில் உள்ள முதல் ஜியோ ரீசார்ஜ் திட்டம் என்றால், அது உங்களுக்கு வெறும் ரூ.249 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக Jio TV, Jio Cinema, Jio Security and Jio Cloud சேவையும் கிடைக்கிறது.

உண்மையிலேயே இது ஒரு டீசெண்டான டீல் தானா?
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்களாகும். இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 46ஜிபி டேட்டா கிடைக்கிறது. மலிவு விலையில் தினமும் 2ஜிபி டேட்டா தடையின்றி கிடைக்க வேண்டும் என்றால், கட்டாயமாக நீங்கள் இந்த ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தைத் தான் ரீசார்ஜ் செய்தாக வேண்டும். இந்த விலைக்கு, 23 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது சிறப்பான விஷயம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்ட ஜியோவின் ரூ.299 திட்டம்
ஜியோவிடம் இருந்து அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்ட திட்டம் என்றால், அது இந்த ரூ.299 ரீசார்ஜ் திட்டம் மட்டுமே. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டாவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS போன்ற நன்மைகளுடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக Jio TV, Jio Cinema, Jio Security and Jio Cloud சேவையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஜியோவிடம் இருந்து அதிக நன்மை கிடைக்கும் ரூ.533 திட்டம்
அடுத்த திட்டம் ரூ.500 விலை வரம்பில் இருந்து சற்று அதிகரிக்கிறது. ஆனால், இதன் நன்மைகள் ஏராளமாக இருக்கிறது. ஜியோவின் ரூ.533 திட்டம் உங்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. நாம் முன்பு பார்த்த திட்டங்கள் 1 மாதத்திற்கு நெருக்கமான வேலிடிட்டியை வழங்குகின்றன.

மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கிறதா?
ஆனால், இந்த திட்டம் உங்களுக்கு 2 மாதத்திற்கு நெருக்கமான வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது என்பது ஒரு சிறப்பான விஷயமாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளாக Jio TV, Jio Cinema, Jio Security and Jio Cloud போன்ற சேவையும் நிறுவனம் வழங்குகிறது. ஜியோ தவிர மற்ற நிறுவனங்கள் இந்த விலையில் என்ன வழங்குகிறது என்று குயிக்காக பார்த்துவிடலாம்.

ரூ.500 விலைக்குள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்ன வழங்குகிறது?
ஏர்டெல் ரூ.179, ரூ.319, ரூ.359, ரூ.399 மற்றும் ரூ.499 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.500 விலைக்குள் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அன்லிமிடெட் அழைப்பு நன்மை, OTT சந்தா போன்ற பல பலன்களை வழங்குகின்றது. மறுபுறம், வோடபோன் ஐடியா 2ஜிபி தினசரி டேட்டா வரம்புடன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இது, இப்போது ரூ.359, ரூ.399 மற்றும் ரூ.499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. எந்த திட்டம் உங்களுக்கு பெஸ்ட் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications