Home
News

Airtel, Vi யூஸர்ஸ் போட்டி போட்டு ரீசார்ஜ் பன்றாங்க.! காரணம் இது பட்ஜெட் பிரெண்ட்லியா?

பொதுவாக ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் (Prepaid Recharge Plans) என்று வரும் போது ரூ.100 என்ற விலை வரம்பு முதல் ரூ. 5,000-திற்கு நெருக்கமான விலை வரை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள், ரீசார்ஜ் செய்யக் கிடைக்கின்றன.

ஆனாலும், பொதுமக்களில் பெரும்பாலானோர் அதிக விலை திட்டங்களை விரும்பி தேர்வு செய்வதில்லை. இதற்கு மாறாக, மக்கள் அனைவரும், பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்களையே பெரிதும் விரும்பி ரீசார்ஜ் செய்கிறார்கள்.

அதிக விலை இல்லதா பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்கள்

அதிக விலை இல்லதா பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்கள்

அப்படி, நீங்களும் அதிக விலை இல்லதா, பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்களைத் தான் ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

அதிலும், நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் அல்லது வோடபோன் ஐடியா பயனர் என்றால், கட்டாயமாக இந்த பதிவைத் தவறவிடாதீர்கள்.

உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் பெஸ்ட் Airtel மற்றும் Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

ரூ. 300 செலவிற்குள் பெஸ்ட்டா ரீசார்ஜ் செய்யலாமா?

ரூ. 300 செலவிற்குள் பெஸ்ட்டா ரீசார்ஜ் செய்யலாமா?

இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் ரூ.300 விலைக்குள் கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி ரீசார்ஜ் திட்டங்கள் (Budget Friendly Recharge Plans) என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ. 300 செலவிற்குள் உங்களுக்குக் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரங்களை இப்போது தெளிவாகப் பார்க்கலாம். சரி, வாங்க லிஸ்டை ஒரு முறை செக் செய்து பார்க்கலாம்.

ரூ. 300 விலைக்குள் Airtel வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ. 300 விலைக்குள் Airtel வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்

முதலில் Airtel என்ன நன்மைகளை என்ன விலையில் வழங்குகிறது என்று பார்க்கலாம். Airtel நிறுவனம் உங்களுக்கு ரூ. 300 விலைக்குள் 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.

இவை முறையே ரூ. 239, ரூ. 265, ரூ. 299 போன்ற விலையில் வருகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் இடமிருந்து கிடைக்கும் முதல் குறைந்த விலை திட்டமாக ரூ. 239 திட்டம் இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 239 திட்டம்

ஏர்டெல் ரூ. 239 திட்டம்

இந்த ஏர்டெல் ரூ. 239 திட்டம் உங்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டம் 24 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் இன் கூடுதல் நன்மைகளும் அணுகக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் பெஸ்டான ரீசார்ஜ் பிளான் இதுவாகும்.

ஏர்டெல் ரூ. 265 திட்டம்

ஏர்டெல் ரூ. 265 திட்டம்

அடுத்தபடியாக நாம் பார்க்கவிருக்கும் திட்டம், ரூ. 265 விலையில் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

இத்துடன் கூடுதல் நன்மைகளாக இதில் Hellotunes மற்றும் Wynk Musicக்கான இலவச அணுகல் போன்றவை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

இறுதியாக ஏர்டெல் வழங்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டம், உங்களுக்கு ரூ. 299 விலையில் கிடைக்கிறது.

இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மாதாந்திர வேலிடிட்டியுடன் வருகிறது.

இத்துடன் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் FASTag, Hellotunes மற்றும் Wynk மியூசிக் போன்ற கூடுதல் நன்மையும் கிடைக்கிறது.

Vi வழங்கும் ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்

Vi வழங்கும் ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்

இதேபோல், Vi நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்காக 3 சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ரூ. 300 விலைக்குள் வழங்குகிறது. இவை ரூ.199, ரூ. 219 மற்றும் ரூ. 249 என்ற விலையில் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

Vi ரூ. 199 ரீசார்ஜ் திட்டம்

முதலில் Vi வழங்கும் ரூ.199 திட்டம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ், தினசரி 1ஜிபி டேட்டா ஆகியவற்றை 18 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. Vi மூவிஸ் மற்றும் Vi Tv -யின் கூடுதல் பலன்களை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ 219 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ 219 திட்டம்

அடுத்தபடியாக நமக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கும் டீசெண்டான ரீசார்ஜ் திட்டம் என்றால், அது ரூ 219 திட்டம் தான்.

வோடபோன் ஐடியாவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டாவை 21 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

இத்துடன் கூடுதல் நன்மைகளாக Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் கிடைக்கிறது.

Vi ரூ. 249 ரீசார்ஜ் திட்டம்

Vi ரூ. 249 ரீசார்ஜ் திட்டம்

இறுதியாக, Vi இடமிருந்து கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் ரூ. 249 என்ற விலையில் வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை 21 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளைப் பொறுத்த வரையில், இது Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Best Budget Friendly Airtel and Vi Prepaid Plans Under Rs 300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X