Home
News

BSNL கூவி கூவி விற்கும் திட்டம்.. 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் கிடைக்குமா? கொஞ்சம் முன்னாடி வாங்க நாங்க தரோம்..

இந்தியாவின் நம்பகமான மக்கள் நெட்வொர்க்காக மாறிவரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது மிகவும் மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டம் கிடைக்குமா? அதில் டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மையோடு கூடுதல் இலவச நன்மையும் கிடைக்குமா? என்று கேட்ட வடிக்கையாளர்களுக்காகவே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

100 ரூபாய்க்கு மேற்குறிய நன்மைகளுடன் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை எந்தவொரு டெலிகாம் நிறுவனமானது வழங்க முடியுமா? என்ற சந்தேகத்துடன் கேட்ட மக்களுக்கு பிஎஸ்என்எல் எங்களால் முடியும், ஆனால், கொஞ்சம் முன்னாடி விலையை நகர்த்தி வாருங்கள். நீங்கள் கேட்ட எல்லா நன்மைகளையும் அடக்கிய ஒரு திட்டத்தை நாங்கள் வெறும் ரூ. 118 ரூபாய் விலையில் வழங்குகிறோம் என்று அறிவித்துள்ளது.

BSNL கூவி கூவி விற்கும் திட்டம்.. 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் கிடைக்குமா?

100 ரூபாய்க்கு ரீசார்ஜ் கிடைக்குமா? கொஞ்சம் முன்னாடி வாங்க நாங்க தரோம் - BSNL:

100 ரூபாய் விலை புள்ளியில் ரீசார்ஜ் திட்டத்தை எதிர்பார்த்தவர்களுக்கு BSNL தற்போது பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் என்ற பெயரில் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan) 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை பெறுகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் சேவைகளை இலவசமாக பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மையை பற்றி பேசுகையில், இத்திட்டம் 10GB ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆம், 4ஜி வேகத்தை ஆதரிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதே இந்தியாவில் பல இடங்களில் அதன் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்கும் இடங்களில் இந்த திட்டம் 4ஜி ஸ்பீட் வேகத்தையும், 4ஜி சேவை இல்லாத இடங்களில் 3ஜி (BSNL 3G) ஸ்பீட் வேகத்தையும் வழங்கும். இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வாரி வழங்கியுள்ளது. இலவச நன்மைகளை வழங்க பிஎஸ்என்எல் இப்போது ஒரு படி மேலே சென்று, 7 வகையான நன்மைகளை இந்த திட்டத்துடன் இலவசமாக வழங்குகிறது.

Jio-வை மிஞ்சிய பிஎஸ்என்எல் பிளான்:

உதாரணமாக, இந்தியாவின் மலிவு விலை திட்டங்களை வழங்கும் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோவின் இலவச நன்மைகளான ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதேபோல், ஹார்டி கேம்ட (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell),

கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), சிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. 100 ரூபாய் விலை புள்ளியில் புதிய ரீசார்ஜ் திட்டம் தேடுபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid Recharge Plan At a Price Range Of 100 Rupee To Use Check BSNL Rs 118 Plan Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X