Home
News

2025 BSNL ரீசார்ஜ்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்க உள்ளது பிஎஸ்என்எல். பின்பு லைவ் டிவி சேனல், 5ஜி சோதனை எனப் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது இந்நிறுவனம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சேவைக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 2025 இல் ரூ.500க்கு கீழ் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது இந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

2025 BSNL ரீசார்ஜ்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே திட்டத்தில் இந்த ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 228 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ரூ.228 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

2025 BSNL ரீசார்ஜ்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்கள்..

பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 215 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா
கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் (Gameon), பிஎஸ்என்எல் டியூன் (BSNL Tunes), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid Plans Under Rs 500 in 2025: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X