Home
News

அடேங்கப்பா.. ரூ.400 போதும்.. 54 நாள் வரை வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

பிஎஸ்என்எல் (bsnl) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் பலர் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது ரூ.400க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தான் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன.

அடேங்கப்பா.. ரூ.400 போதும்.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan) 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 228 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 62ஜிபி டேட்டா வரை கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரூ.147 திட்டம் (BSNL Rs 147 prepaid plan) ஆனது மொத்தம் 10ஜிபி டேட்டா வழங்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Best BSNL prepaid plans under Rs 400: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X