அப்படி போடு.. வெறும் ரூ.200-க்கு கீழ் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களில் விலையை உயர்த்தியதால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சிம் கார்டை வாங்கி குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் 11 முதல் 25 சதவீதம் வரை உயர்வை அறிவித்தன.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை. இன்னமும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது இந்நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200-க்கு கீழ் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Bsnl Rs 108 prepaid recharge plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டதில் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 185 prepaid recharge plan) ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 187 prepaid recharge plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 197 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த நன்மைகள் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதாவது சிம் கார்டை நீண்ட நாட்கள் செயலில் வைத்திருக்க இதுபோன்ற திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 199 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது அந்நிறுவனம். தற்போது பிஎஸ்என்எல் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








