அப்படி போடு.. BSNL-க்கு படையெடுக்கும் மக்கள்.. 4ஜி ரெடி.. மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள்..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சமீபத்தில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. சமீபத்தில் கூட இந்நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து அசரவைத்தது என்று தான் கூறவேண்டும்.
அதேபோல் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து Phase IX.2 திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் Phase IX.2 திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 2114 4ஜி டவர்களை அமைப்பதற்கான பணிகள் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த திட்டத்திற்கான செலவு 16.25 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வரும்வோம். இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 107 Prepaid Plan) ஆனது ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இதில் 200 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 197 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த நன்மைகள் 18 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். சிம் கார்டை நீண்ட நாட்கள் செயலில் வைத்திருக்க இதுபோன்ற திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையைப் பெறுகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
குறிப்பாக ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 397 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த சலுகைகள் 30 நாட்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், சேலஞ்சர் அரினா கேம்ஸ், லிஸ்டன் போட்காஸ்ட், வாவ் என்டர்டெயின்மென்ட், ஜிங் மியூசிக், ஆஸ்ட்ரோடெல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இதில் இருக்கிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோன்று பல்வேறு திட்டங்களை கம்மி விலையில் வழங்கி வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை வழங்கும் என்பதால் இப்போதே பலர் பிஎஸ்என்எல் சிம் வாங்க தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications