தலைவா நீ கிரேட்.. BSNL-க்கு கும்புடு.. Jio, Airtel, Vi பயனர்கள் கூட புது BSNL சிம் வாங்குறாங்க.. காரணம் இதான்?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கடுமையான விலை அதிகரிப்பை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளன. இதில் விஐ நிறுவனம் மட்டும் நாளை முதல் அதன் புதிய டேரிஃப் விலை அதிகரிப்பை (New Tariff Hike) அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கடுமையான விலை ஏற்றத்திற்கு நடுவே, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மட்டும் எந்தவித விலை அதிகரிப்பையும் அறிவிக்காமல், இந்தியாவின் மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பைட் (Postpaid) திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் (Private telecom networks) இன்று முதல் 25% விலை அதிகரிப்பை அதன் அணைத்து ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பைட் (Postpaid) திட்டங்கள் மீது அமல்படுத்துகிறது. இனி இந்திய வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்காக இருந்தாலும், மிகவும் குறைந்த விலையில் ஒரு அடிப்படை திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால் கட்டாயமாக ரூ. 199 செலவிட வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது.

தலைவா நீ கிரேட்.. BSNL-க்கு கும்புடு போடும் Jio, Airtel, Vi யூஸர்கள்:
ஆனால், இந்தியாவின் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டும் இப்போது ரூ. 107 முதல் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தை (BSNL Basic Recharge Plans) வழங்கி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கொண்ட திட்டங்கள் கூட, தனியார் நிறுவனங்களின் திட்டங்களை விட மிகவும் மலிவானதாக அதிக வேலிடிட்டியுடன் இருப்பதனால், தற்போது பல இந்திய மக்கள் புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்க முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பல இடங்களில் அதன் 4ஜி (BSNL 4G) சேவையை இப்போது வழங்க துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிக விலை ஏற்றத்திற்கு நடுவே, பிஎஸ்என்எல் பக்கம் சாய துவங்கியுள்ளனர். பலர் இப்போது பிரைவேட் நெட்வொர்க்குகளில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மொபைல் போர்ட்டபிலிட்டி (Mobile Portability) செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, பிஎஸ்என்எல் நிறுவனம் அப்படி என்ன திட்டங்களை, மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
1. பிஎஸ்என்எல் ரூ. 107 திட்டம் (BSNL Rs 107 Plan):
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த அடிப்படை திட்டம் ரூ. 107 விலையில் 3GB அளவிலான 4ஜி டேட்டா, 200 நிமிட டாக் டைம் மற்றும் 35 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது.
2. பிஎஸ்என்எல் ரூ. 197 திட்டம் (BSNL Rs 197 Plan):
இந்த திட்டம் 70 நாள் வேலிடிட்டியுடன் 2GB டேட்டாவை (4G) வழங்குகிறது. இது முதல் 18 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.
3. பிஎஸ்என்எல் ரூ. 199 திட்டம் (BSNL Rs 199 Plan):
மேற்கூறிய அதே டேட்டா நன்மையுடன், தொடர்ந்து 70 முழு நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை வேண்டுமென்றால், நீங்கள் இந்த ரூ. 199 பிஎஸ்என்எல் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
4. பிஎஸ்என்எல் ரூ. 397 திட்டம் (BSNL Rs 397 Plan):
இந்த திட்டம் 150 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 2GB அளவிலான 4ஜி டேட்டாவை முதல் 30 நாட்களுக்கு வழங்குகிறது.
5. பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan):
இந்த திட்டம் 300 நாள் வேலிடிட்டியுடன் முதல் 50 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 2GB அளவிலான 4ஜி டேட்டா நன்மையை தடையில்லாமல் வழங்குகிறது.
பிரைவேட் நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பிஎஸ்என்எல் திட்டங்கள் தலைசிறந்து விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








