சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள்: ரூ.118 முதல் ரீசார்ஜ் திட்டம்.. 70ஜிபி டேட்டா வரை வழங்கி அசத்தும் BSNL..
தொலைத்தொடர்புத் துறையில் மூன்று தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நல்ல டேட்டா பலன்களுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை மற்ற நிறுவனங்களை விடக் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த செலவில் வழங்குகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்கள் கட்டணத் திட்டங்களை உயர்த்தியுள்ளன, மேலும் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் மலிவு விருப்பங்களைத் தேடுவதால், BSNL இன் ப்ரீபெய்ட் திட்டங்கள் அவர்களுக்குச் சிறந்த வழியாக இருக்கிறது.

சிறந்த டேட்டா பலன்களுடன் கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்கள்
நல்ல டேட்டா பலன்களுடன் கூடிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். இந்த பதிவில் உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த BSNL திட்டங்களை தொகுத்துள்ளோம். உண்மையில், உங்களின் பாக்கெட் பணத்திற்குப் பங்கம் விளைவிக்காத சிறந்த திட்டங்களை அற்புதமான நன்மைகளுடன் BSNL வழங்குகிறது. இந்த சிறந்த திட்டங்கள் பற்றி இப்போது பார்க்காமல், உங்களுக்கான முதல் திட்டம் ரூ. 118 என்ற ஆரம்ப விலையில் துவங்குகிறது.

BSNL வழங்கும் பெஸ்ட் பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்
BSNL வழங்கும் STV_118 திட்டம் ரூ. 118 விலையில் வருகிறது மற்றும் 26 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டெல்கோ வழங்கும் அடுத்த திட்டம் உங்களுக்கு ரூ. 147 விலையில் STV_147 பேக் ஆகக் கிடைக்கிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் BSNL ட்யூன்களுக்கான அணுகலுடன் மொத்தம் 10 ஜிபி டேட்டாவை 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு ரூ.147 விலையில் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் STV_185 மற்றும் Voice_187 பேக்
BSNL இப்போது ஒரு STV_185 திட்டத்தையும் வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 SMS உடன் வழங்குகிறது தினமும் 1 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வெறும் ரூ.185 விலையில் வருகிறது. இந்த திட்டம் BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. டெல்கோ வழங்கும் Voice_187 பேக், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் வெறும் ரூ.187 விலையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி என்ற டேட்டாவை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் STV_247 ப்ரீபெய்ட் பேக்
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் OTT நன்மைகளுடன் கூட சில பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது. BSNL வழங்கும் STV_247 திட்டமானது ரூ. 247 விலையில் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன் இந்தத் திட்டம் மொத்தம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், BSNL ட்யூன்ஸ் மற்றும் EROS நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் BSNL வழங்கும் 56 நாட்கள் வேலிடிட்டி பேக்
28 நாட்கள் அல்லது 30 நாட்கள் வேலிடிட்டி போதாது என்று நினைப்பவர்கள் BSNL வழங்கும் 56 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை திட்டங்களைத் தேர்வு செய்யலாம். BSNL வழங்கும் STV_298 ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகிய நன்மைகளை 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வெறும் ரூ. 298 விலையில் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் EROS நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை 56 நாட்களுக்கு வழங்குகிறது.

40 ஜிபி டேட்டா நன்மை வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்
மேலும், BSNL ஆனது டேட்டா மட்டும் வழங்கும் ப்ரீபெய்ட் போக்குகளையும் வழங்குகிறது. டெல்கோ வழங்கும் Data_WFH_151 பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு மொத்தமாக 40 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு Zing அணுகலுடன் வெறும் ரூ. 151 விலையில் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் 40 ஜிபி டேட்டா போதாது,

பட்ஜெட் விலையில் 50 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம்
இதை விட அதிகமாக டேட்டா தேவைப்படும் என்ற வாடிக்கையாளர்களுக்காக 50 ஜிபி மற்றும் 70 ஜிபி வரை டேட்டா கிடைக்கும் சில திட்டங்களை BSNL வைத்துள்ளது. BSNL அதிக டேட்டா நன்மையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக STV_198 என்ற திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை 50 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்கு வெறும் ரூ. 198 விலைக்கு வழங்குகிறது.

70 ஜிபி டேட்டா நன்மை வேண்டுமா?
கடைசியாக, BSNL வழங்கும் அதிக டேட்டா பயன் திட்டம் என்றால், அது Data_WFH_251 பேக் ஆகும். இது ரூ. 251 விலையில் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மொத்தமாக 70 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது மற்றும் Zing அணுகலுடன் வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பது சிறப்பு. இந்த விலையில், இந்த நன்மைகளுடன் இந்தியாவில் வேற எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களில் எந்த திட்டம் உங்களுடைய பட்ஜெட்டிற்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications